இஸ்ரேலின் அன்றையப் பிரதமர் கோல்டா மெய்ர் (வயது 75), யாராவது இஸ்ரேலிய பிரஜையை தாக்கத் துணிந்தால் என்ன நடக்கும் என்பதை உலகுக்குக் காட்டினார். ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது, 1972 செப்டம்பர் 5 அன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், வெளிநாட்டு மண்ணில் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்றனர். நாடு முழுவதும் குமுறல், சோகம். ஆனால் இஸ்ரேல் “பாட்டி” கோல்டா மெய்ர், அழவும் இல்லை, வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளவும் இல்லை. அதற்கு பதிலாக, அவர் பாலஸ்தீன பயங்கரவாதிகளை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள எல்லா தீவிரவாதிகளையும் நடுங்கச் செய்யும் விதமாக களமிறங்கினார்.
கொலைகள் நடந்த 48 மணி நேரத்திற்குள், கோல்டா மெய்ரின் உத்தரவின் பேரில் இஸ்ரேலிய ராணுவம் சிரியாவுக்குள்ளும், லெபனானுக்குள்ளும் நுழைந்து 10 பாலஸ்தீன முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி, 200 பயங்கரவாதிகள் உள்பட பலரைக் கொன்றது. ஆனால் மூதாட்டி கோல்டா மெய்ர் அத்துடன் நிற்பதாயில்லை. 200 பேர் இறந்த பிறகும், அவரது இதயத்தில் பழிவாங்கும் நெருப்பு அடங்கவில்லை. அடுத்து அவர் செய்தது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் கொலைக்குப் பழிவாங்க கோல்டா மெய்ர் ‘ஆபரேஷன் ராத் ஆஃப் காட்’ (கடவுளின் சீற்றம்) என்ற நடவடிக்கையைத் தொடங்கினார்.
இஸ்ரேலின் மிகவும் அஞ்சப்படும் உளவு அமைப்பான மொசாத்திடம், அவர் பணியை ஒப்படைத்தார். அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு, இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் படுகொலையுடன் தொடர்புடைய 35 பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து ஒழித்தது மொசாத் அமைப்பு.
தான் குறிவைத்த பயங்கரவாதியை கொல்வதற்கு முன், மொசாத் இப்படி ஒரு குறிப்புடன் பூங்கொத்து அனுப்பும்: “நாங்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டோம் என்பதை இது உங்களுக்கு நினைவூட்டுகிறது.” அதன் பிறகு, பயங்கரவாதி சரியாக 11 முறை சுடப்படுவான் – கொல்லப்பட்ட 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களில் ஒவ்வொருவர் நினைவாக ஒரு தோட்டா.
மொசாத் மேலும் 20 ஆண்டுகள் ‘ஆபரேஷன் ராத் ஆஃப் காட்’ நடவடிக்கையை தொடர்ந்தது, உலகம் முழுவதும் பாலஸ்தீன பயங்கரவாதிகளை வேட்டையாடியது. இதனால்தான் கோல்டா மெய்ர் என்ற அந்த இஸ்ரேல் பாட்டி, இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார். பாருங்கள், பயங்கரவாத செயலுக்கு பழிவாங்குவது என்றால் இப்படித்தான்.