பண்டிட்கள் வெளியேற்றம்

காஷ்மீரி பண்டிட் பூரன் கிரிஷன் பட் அக்டோபர் 15 அன்று ஷோபியான் மாவட்டத்தின் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்டோபர் 18 அன்று, மோனிஷ் குமாரும் ராம் சாகரும் தங்கள் வாடகை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பயங்கரவாதிகளின் கையெறி குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தொடர் தாக்குதல்களையடுத்து தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை விட்டு சுமார் 35 முதல் 40 காஷ்மீரி பண்டிட்டுகள் அடங்கிய 10 காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள், பயத்தின் காரணமாக தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி ஜம்முவை அடைந்து தங்கள் உறவினர்களுடன் வசித்து வருகின்றனர். “காஷ்மீர் பள்ளத்தாக்கில் நாங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லை. பயங்கரவாத கொலைகளால் அச்சத்தில் வாழ்கிறோம். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கிருந்து சென்றவர்கள் பயத்தின் காரணமாக சமீபகாலமாக விளைந்த ஆப்பிளைக்கூட தங்கள் வீடுகளில் விட்டுச் சென்றுவிட்டனர். பலமுறை பாதுகாப்புக் கோரியும் எங்கள் கிராமத்தில் இருந்து மிகத் தொலைவிலேயே காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது கிராமமே காலியாகிவிட்டது” என்று மற்றொரு கிராமவாசி கூறியுள்ளார்.