பிரதமர் நரேந்திர மோடியின் மேன் இன் இந்தியா, திறன் மேம்பாட்டு திட்டங்களால் ஊக்கம் பெற்று படித்த, படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் அரசு, தனியார் தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி மையங்களின் எண்ணிக்கை சுமார் 600 உள்ளது. அரசு தொழிற்பயிற்சி மையத்தின் சிறப்பு சலுகைகள் பின்வருமாறு:
* மாதம் ரூ.500 * விலையில்லா மடிக்கணினி * விலையில்லா மிதிவண்டி * இலவச சீருடை * இலவச பேருந்து அடையாள அட்டை.
இத்துடன் மத்திய அரசின் புதிய அறிவிப்பு: 8ம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ பயின்ற மாணவர்களின் கல்வித் தகுதி 10ம் வகுப்பிற்கு இணை. 10ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி பெற்றிருந்தால் அவர்களின் கல்வித் தகுதி 12ம் வகுப்பிற்கு சமம். மேலும், இதன் மூலம் தொழிற் பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு உருவாகிறது.
ஐடிஐ ஆரம்பித்த காலத்தில் ஆண்கள் மட்டும் பயிலும் நிலையிருந்தது. ஆனால், நாளடைவில் பெண்களும் பயில்வதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது. இதன் மூலம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், பெண்களுக்கு தொழிற்பயிற்சி பயில்வதற்கு வயது வரம்பு தேவையில்லை. இதுபற்றி கிண்டி அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் மற்றும் இணை இயக்குநர் என். புஷ்பராஜ், அனைத்து விதமான தொழிற் துறைகளிலும் மாணவ மாணவிகளுக்கு முறையான பயிற்சியளிக்கப்படுகிறது. அத்துடன் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படுகின்றன. இவ்வாண்டு (2016) முதல் ஐடிஐ விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.விண்ணப்பத்தினை
தீதீதீ.ண்டுடிடூடூணாணூச்டிணடிணஞ்.ணாண.ஞ்ணிதிணா.டிண என்ற இணையதள முகவரியில் பெறலாம். மேலும் தொழிற்பயிற்சி பள்ளி என்னும் மத்திய அரசின் திட்டம் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புடன் கூடிய ‡இஙகூ (‡ச்ணாடிணிணச்டூ இணிதணஞிடிடூ ஞூணிணூ ஙணிஞிச்ணாடிணிணச்டூ கூணூச்டிணடிணஞ்) சான்றிதழ் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.
தனியார் ஐடிஐயான குரோப்பேட்டை மெட்ராஸ் ஐடிஐ, முதல்வர் பி. மதுசூதனன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்றைய தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் எவ்வித உதவியும் ஊக்கமும் வழங்குவதில்லை. ஐடிஐ என்பது படிப்பில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் பயிலும் பயிற்சி முறை. பாடத்திட்டம் இவ்வித மாணவர்களின் அறிவுக்கு எட்டாக்கனியாக விளங்குகிறது. பாடத்திட்டத்தினை எளிய முறையில் அமைக்க வேண்டும். ஏனென்றால், ஐடிஐயில் பயிலும் மாணவர்கள் பயிற்சி வகுப்பில் முழுமையாக தேர்ச்சியடைகிறார்கள். ஆனால் பாடத்திட்டத்தின் காரணமாக எழுத்துத் தேர்வில் தோல்வியை சந்திக்க நேரிடுகிறார்கள்” என்றார்கள்.
அரசு தொழிற்பயிற்சி மையத்தின் இலவசங்கள் அனைத்தும் மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிப்பதற்கே என்று தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் அரசுத் துறையில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை 42 சதவீதமாகவும் தனியார் துறையில் 20 சதவீதம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. தொழிற்பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்கள்.
இன்றைய தொழிற்பயிற்சி மையத்தின் நிலையைப் பற்றியும் தொழிற் துறையைப் பற்றியும் கல்வியின் நிலையைப் பற்றியும் கல்வியாளர் எஸ். மீனாட்சி, தொழிற்பயிற்சி மையம் என்பது மாணவர்களின் தொழிற்திறனை ஊக்குவிப்பதற்கான ஒரு தொழிற்படிப்பு. தொழிற்படிப்பில் திறமையானவர்களை உருவாக்குவதற்கு பள்ளிக் கல்வியில் முறையான அடித்தளம் அமைக்க வேண்டும். மக்களிடையே தொழிற்பயிற்சியினைப் பற்றி தெரியப்படுத்துவதற்கு மாணவர் பேரணி, துண்டுப் பிரசுரம் போன்றவை வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர்களை கையாளுவதற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
– கே. கிருஷ்ணகுமார், எம். மணிகண்டன், எஸ். சந்தோஷ்