பஞ்சாப் மாஃபியாவை ஒடுக்க உ.பி புல்டோசர்களை அனுப்புவோம்: முதல்வர் யோகி

பஞ்சாப் “நிலம், போதைப்பொருள் மற்றும் மணல் மாஃபியாவின் குகையாக” மாறியுள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  குற்றம் சாட்டினார். லூதியானா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப்பில் நடந்த பேரணிகளில், இந்த மாஃபியா குழுக்களை நசுக்க உத்தரபிரதேசத்தின் புல்டோசர்களை அனுப்புவதாகக் கூறினார்.

 

பாஜகவின் லூதியானா வேட்பாளர் ரவ்னீத் சிங் பிட்டு மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் வேட்பாளர் சுபாஷ் சர்மா ஆகியோருக்கு ஆதரவாக தனித்தனி பேரணிகளில் உரையாற்றிய அவர், பஞ்சாபின் புனித பூமி ஆம் ஆத்மி அரசாங்கம் மற்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியினால் “அசுத்தப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். “காங்கிரஸும் ஆம் ஆத்மியும் பஞ்சாப் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த அரசுகளின் அலட்சியத்தால்தான் நில மாபியா, போதைப்பொருள், மணல் மாபியாக்களின் கூடாரமாக மாநிலம் மாறியுள்ளது. இந்த மாஃபியாக்கள் நசுக்கப்பட வேண்டும், இதற்கு லூதியானா மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் மக்கள் வாக்களித்து பாஜக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். மாஃபியாக்களை நசுக்க உ.பி.யில் இருந்து பிட்டு மற்றும் சர்மாவுக்கு புல்டோசர்களை அனுப்புவேன்,” என்று கூறிய அவர், பஞ்சாபில் பாஜக அடுத்த ஆட்சியை அமைத்தால், 48 மணி நேரத்தில் மாஃபியா குழுக்களை ஒழித்துவிடும் என்றார்.