பஜ்ரங் தள ஆர்வலர் கொலை

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் பஜ்ரங் தள பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை காவ்ல்துறையினர் கைது செய்துள்ளனர். கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பசாரிச்சேரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட லோயர்புவா பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பின் ஆர்வலர் சம்பு கொய்ரி, தனது வீட்டிற்குச் செல்லும் வழியில், சலீம் உதீன் என்ற முஸ்லிம் மதவெறி நபரால் கூரிய ஆயுதத்தால் கடுமையாக பலமுறை தாக்கப்பட்டார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கொலையாளி சலீம் உதீனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த படுகொலையால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஹிந்து ஆர்வலர்கள், குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு மற்றும் கடையை அடித்து சேதப்படுத்தினர். இதனிடையே கரீம்கஞ்ச் மாவட்டத்தின் பஜ்ரங் தள் தலைவரான பிஸ்வஜித் பானிக் இதுகுறித்து கூறுகையில், பாதிக்கப்பட்டவர் பஜ்ரங் தளத்தின் செயல்பாட்டாளர் சம்பு கோயிரி. சம்பவம் நடந்தபோது அவர், ஹைலகண்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சலீம் உதீனால் தாக்கப்பட்டார். குற்றவாளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அரசையும் காவல்துறையையும் கோருகிறோம்” என கூறினார்.