நெட்டிசன்கள் சீனாவுக்கு பதிலடி

பாரதத்தின் பிரிக்கமுடியாத பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு சமீபத்தில் சீனாவை ஆளும் கம்யூனிச அரசு வேறு பெயர்கள் சூட்டி காமெடி செய்தது. இதற்கு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்ததுடன், இப்படி செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதை சீனாவுக்கு சுட்டிக்காட்டியது. இந்நிலையில், பாரதத்தை சேர்ந்த நெட்டிசன்கள் சீனாவை வெறுப்பேற்றும் விதமாக, சீனாவின் பல இடங்களுக்கு மறுபெயரிட்டனர். இதில், சீன தலைநகர் பெய்ஜிங் ‘புஜாங் நகர்’ என பெயர் மாற்றம் பெற்றது, ஷாங்காய்’க்கு ‘ஷாம்புநகர்’ என்றும் சின்ஜியாங் பகுதி ‘சிவ்கங்கா நகர்’ என்றும் திபெத்திய தலைநகர் லஹ்சா ‘லக்ஷ்மங்கர்’ என்றும் குவாங்சோ ‘காந்தா கர்’ என்றும் பெயர் மாற்றப்பட்டன. இதில் உச்சகட்டமாக சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கும் கூட ஸ்ரீ ஜடாசங்கர் என்ற புதிய பெயரைப் பெற்றுவிட்டார்!