நெடுஞ்சாலைத்துறை புதிய முயற்சி

டெல்லி  ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை மின்சார நெடுஞ்சாலையாக ஒரு புதிய மாற்றத்தை பெற உள்ளது. அதற்கான ஆய்வுகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அச்சாலைகளில் செல்லும் பேருந்துகளும், லாரிகளும் ரயில்வே என்ஜின்கள் போன்று மின்சாரத்தால் இயக்கப்படும். இந்த மின்சார நெடுஞ்சாலையை அமைக்க வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன்  நெடுஞ்சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெல்லியில் இருந்து ஜெய்ப்பூருக்கு மின்சார நெடுஞ்சாலை அமைப்பது எனது கனவு திட்டம் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.