நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவ சமுதாயம் பயப்படவில்லை!

இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும், நமது மனமார்ந்த வாழ்த்துகள். அகில பாரத அளவில்,  தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மாணவச் செல்வங்கள் முதல் மதிப்பெண்ணை பெற்று, நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

“நீட் தேர்வு கஷ்டம்னு எல்லாரும் பயப்படாதீங்க… வீட்ல இருந்து படிச்சே நாம சாதிக்கலாம்”…என்கிறார் நீட்தேர்வில் 720க்கு 639 மதிப்பெண்கள் பெற்று அசத்திய மயிலாடுதுறை மாவட்ட மாணவி.

எத்தனையோ நுழைவுத்தேர்வு எழுதும்  குழந்தைகளுக்கு நீட் தேர்வும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றிப் பெறலாம் என  ஆர்வமாகி முன்னேறி வருகின்றனர் என்பது கண்கூடு.

நீட் தேர்வில் முதல் மதிப்பெண்ணான 720/720 பெற்றவர்களில் ஒருவரான, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி, செல்வி ஜெயந்தி பூர்வஜாவை, தமிழக பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அவரது கடின உழைப்பிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஸ்டெதஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஆளும் அரசியல் கட்சி நீட் தேர்வை தடை செய்வதற்கான எத்தனையோ குறுக்கு வழிகளில் முயற்சித்து மாணவர்களை குழப்பினாலும், தங்கள் நிலைப்பாடுகளில் மாறாமல் முன்னேறி வருகிறது மாணவ சமுதாயம் என்பதை தேர்ச்சி சதவிகிதம் உணர்த்துகிறது..
இதைத் தான் அதிர்ஷ்டவசமாக, இப்போது எங்களிடம் மிகவும் தகவலறிந்த தலைமுறை உள்ளது. எங்கள் குழந்தைகள் அவ்வளவு அப்பாவிகள் இல்லை. அவர்கள் எல்லாவற்றையும் புரிந்துகொண்டு நம் தலைமுறையை விட மிகவும் முன்னால் இருக்கிறார்கள். அவர்கள் நோக்கம், நிகழ்ச்சி நிரல் மற்றும் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ”என்று நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் அடங்கிய பெஞ்ச், அன்று வாய்மொழியாக சொன்னார்கள்.

வழக்கறிஞர் எம்.எல்.ரவி, இது “ஆளும் கட்சியினர் அரசியல் ரீதியாக குழந்தைகளை பயன்படுத்திக் கொள்ளும் வழக்கு” என்று கூறினார்.

“மாணவர்களின் கையொப்பம் எடுக்க பெற்றோரிடம் அனுமதி பெறவில்லை. இந்தச் செயலால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி, பின்னர் நீட் தேர்வை எதிர்கொள்ள நேரிடும். ‘என மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனதில் உறுதியுடன் கடினமாக உழைத்தால்,  எண்ணிய இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கும் அனைத்து மாணவ செல்வங்களுக்கும்,  மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்கள்.

“டாக்டர்” கனவு இன்று பொருளாதார வசதி குறைவான குழந்தைகள் வீட்டில் நனவாகியுள்ளது என்பது சிறப்பு. பல லட்சங்கள் வசூலித்த பினாமி கல்லூரிகளுக்கு நீட் மூலம் வருமானம் குறைந்துள்ளது. அதனால் தான் தற்கொலைகள் காரணம் காட்டப்பட்டன. எல்லா தற்கொலைகளுக்கும் “நீட்” என்று பெயர் சூட்டப்பட்டது..

“தற்கொலை நடப்பதால் நீர் தேர்வை தடைபன்னனும்னா… சினிமாவைப் பார்த்து மது, போதை, கொலை சம்பவங்கள் செய்து வருகிறார்கள். ஆதலால் சினிமாவை இழுத்து மூடியிருக்கனும் என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் பொதுமக்கள்.

மனதில் உறுதியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எண்ணிய இலக்கை நிச்சயம் எட்டலாம் என்பதை நிரூபித்த மாணவச் செல்வங்களுக்கு மீண்டும் பாராட்டுகள் !.