இந்த நீட் போராட்டத்தை முன்னின்று நடத்துவது திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சிகள் தான்! இவர்களுக்கு நாம் சில கேள்விகளை வைப்போம்.
* நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ் ஆட்சியின் போது, திமுக ஆதரவுடன் 2013ல் தானே! இதை மறுக்க முடியுமா? அன்று ஆதரவு, இன்று எதிர்ப்பு ஏன்?
* உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், நீட் வேண்டாம் என தான் ரிடையர் ஆகும் ஒரு நாள் முன்பு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தபோது ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி தானே? அன்று கோட்டை விட்டு இன்று கொக்கரிப்பது ஏன்?
* 2013 ஜூலை 18 அன்று வந்த இந்த தீர்ப்பை எதிர்த்து, அதாவது நீட் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு (17.12.2013) மனு கொடுத்தது அப்போதைய Health Minister குலாம்நபி ஆசாத் தானே! கலைஞர் வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும், திமுகவின் மிக நெருங்கிய நண்பர் குலாம்நபி ஆசாத்தை கூட்டணியில் இருந்த திமுக ஏன் தடுக்கவில்லை?
* சரி இதெல்லாம் போகட்டும். நீட் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்து அதை சட்ட வடிவமைக்க சொன்னபோது 2016 ஜூலை 19ல் நீட் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு திமுக கூட்டணி காங்கிரசும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவு தெரிவித்தது ஏன்?
* 2016, ஆகஸ்ட் 1ல் அதே மசோதா ராஜ்ய சபாவில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சபையில் அமர்ந்திருந்த திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், கனிமொழி இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏன் பேசவில்லை?
இந்த கேள்வியை நாம் கேட்கும் போதெல்லாம் அவர்களிடமிருந்து மழுப்பலான பதிலே வருகிறதே ஏன்? இதோ காரணம் –
நீட் தேர்வின் மூலமாக தமிழகத்தில் அரசாங்க, தனியார் ஒதுக்கீடு சீட்டுகளுக்கு நீட் தேர்வில் பாசானால் மட்டுமே அட்மிஷன். அரசு ஒதுக்கீட்டில் இவர்களது டிக்ஸ்னரி கோட்டா செல்லாது. இதன் மூலம் தனக்கு வேண்டியவர்கள், கட்சிக்காரர்கள், சொந்தக்காரர்கள் என சீட் பெற முடியாது.
மேலும் தனியார் ஒதுக்கீடு மூலமாக சீட்டுக்கு 70 லட்சம் ரூபாய், இனாமாக பெற்றுக் கொண்டு வளம் கொழித்த மருத்துவக் கல்லூரி அட்மிஷனில் மட்டும் ஆண்டுக்கு இவர்கள் சுமார் ரூ.1,600 கோடி பார்த்தார்கள் என ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த தலைவர்கள், கல்லூரிகள் இனி அப்படி செய்ய முடியாது. நீட் பாசானால் மட்டுமே சீட். இல்லையெனில் வெறும் 60 மார்க் வாங்கிய கோடீஸ்வர மகன் / மகள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாது.
இதனால் வெறுத்துப்போன திமுக, தனியார் கல்லூரிகளின் போராட்டம்தான் நீட் எதிர்ப்பு மாணவர் தூண்டுதல் போராட்டங்கள். திமுக சொல்லும் சமூக நீதிக்கு எதிரானது நீட் என்பதும் அப்பட்டமான பொய் என்பது நிரூபணமாகியுள்ளது. அதாவது 2,653 சீட்டில் வெறும் 193 சீட் மட்டுமே ஓ.சி எனப்படும் முன்னேறியவர்களுக்கு கிடைத்துள்ளது. மீதமுள்ள 2,460 சீட்டும் பிற்படுத்தப்பட்டவர்களே பெற்றுள்ளனர்.
மாநில கல்வி திட்டத்தில் மருத்துவ மாணவராக அதிக மதிப்பெண் பெற ஒரு முறை மட்டுமே தேர்வு எழுதமுடியும்.
நீட் தேர்வு, மாணவர்கள் மூன்று முறை எழுதமுடியும். கல்வி கட்டணம் அரசு ஒதுக்கீட்டில் மிகக் குறைவு. தனியார் ஒதுக்கீட்டில் ஞிச்ணீணாச்ணாடிணிண ஞூஞுஞுண் வாங்க முடியாது. நாடு முழுவதும் எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர முடியும்.
மேல்தட்டு மக்கள், பணமுள்ளவர்கள், அரசியல்வாதிகள் குழந்தைகளுக்கு பட்டா போட்டுக் கொடுத்த டாக்டர் சீட்டை ஏழைகளுக்கும் கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தது தற்போதைய மத்திய பாஜக அரசு.
நீட் அறிமுகமாவதற்கு முன் 2010லிருந்து பல்வேறு வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டு சிறிது சிறிதாக உருவானது. கோர்ட்டில் 160 வழக்குகளைத் தாண்டி உச்ச நீதிமன்றம் 9 பேர் கொண்ட பெஞ்ச் வரை சென்று வடிவம் பெற்றிருக்கிறது. தமிழ்நாடு மாற்றத்தை ஏற்க என்றும் தயங்கியதில்லை.
இதை மாணவர்கள் புரிந்துகொண்டு, நீட்டிற்கான சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டால், வரும் ஆண்டே நீங்கள் குறைந்த கல்வி கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிக்கலாம். தயவுசெய்து கல்வியில் அரசியல் செய்ய அனுமதிக்காதீர்கள். டூ