தமிழ் கடவுளான முருகன் பிறந்த தைப்பூசத் திருவிழாவிற்கு, இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் பொது விடுமுறை அளிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் இதுவரை விடுமுறை கிடையாது. இந்நிலையில் தமிழக ஹிந்துக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எடப்பாடியாரின் தலைமையிலான தமிழக அரசு, தற்போது தைப்பூசத்தை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள். ஆனால், இதே தமிழக அரசு, மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்ல தடைவிதித்துள்ளதுடன், பாதயாத்திரை சென்ற விஷ்வ ஹிந்து மாநில பொறுப்பாளர் சேதுராமனை காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு புறம் விழாவுக்கு விடுமுறை மறுபுறம் பாத யாத்திரைக்கு தடை. இதில் இருந்து என்ன சொல்ல வருகிறது தமிழக அரசு என்று மக்களுக்கு புரியவில்லை.