நியூசிலாந்தில் ஹிந்து கண்ணோட்டம்

நியூசிலாந்தில் வாழும் ஹிந்துக்கள் அங்கு கல்வி, அரசியல், வணிகம், சுகாதாரம், சுற்றுச்சூழல், கலை,விளையாட்டு என பல்வேறு துறைகளில் அந்நாட்டின் முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றி வருகின்றனர். அங்குள்ள ஹிந்து இளைஞர் நியூசிலாந்து (HYNZ) என்ற அமைப்பு, நியூசிலாந்தில் உள்ள இளைஞர்களுடன் பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறது. மற்ற இன மற்றும் மதசமூகங்களுடன் விவாதம், மாநாடு, கருத்தரங்கு,தொழில் வளர்ச்சி பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவர் மந்திரா ஷைலஜ். இந்நிலையில், டைவர் சிட்டி சென்டர் அவோடியாரோ நியூசிலாந்து (RDC) என்ற அமைப்பு நியூசிலாந்து முழுவதும் உள்ள பல்வேறு மதத்தலைவர்களை ஒன்றிணைத்து காலநிலை மாற்ற பிரச்சனைகள் குறித்த அறிக்கையை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே ஹிந்துவும் வயதில் இளையவருமான மந்திரா ஷைலஜ், இந்த காலநிலை மாற்ற அறிக்கையில், ஹிந்து கொண்ணோட்டத்தை கொண்டு வருவதோடு, அதில் இளைஞர்களின் குரலாகவும்தான் இருக்க முடிந்தது என தெரிவித்து உள்ளார்.