இன்றைய பத்திரிகையாளர்களைப் போல புராணங்களில் வர்ணிக்கப்பட்ட தலைசிறந்த முனிவர் நாரதர் செய்திகளை சேகரித்து மற்றவர்களுக்கு தொகுத்து வழங்கினார்.
பழங்காலத்தில் தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் என மூன்று விதமான நபர்கள் இருந்தனர். நாரதர் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். மதிக்கவும் பட்டார். இம்மூன்று பிரிவினர்களுக்கும் அவரவர்களுக்கென்று தனி உலகம் இருந்தது. அவர்களுக்கு இடையேயான தொடர்பு அன்பு, பொறாமை, வெறுப்பு, யுத்தம் என்று வெவ்வேறு விதமாக பிரதிபலித்தது. இந்திரன், பிரம்மா, ஹிரண்யகசிபு, கம்சன் என எல்லோர் பகுதியிலும் அனுமதியும் அறிவிப்பும் இன்றி நாரதர் சென்று வந்தார்.
நாரதர் முன்னறிவிப்பின்றி வருவதால் எல்லோரும் அவரை செய்தி தருபவராகவே பார்த்தனர். அவர் செய்தியைக் கொண்டு சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தார். எத்தகைய காரண காரியமும் இன்றி அவர் எங்கேயும் சென்றதில்லை. இன்றைய சூழ்நிலையில் இதுவே பத்திரிகைத் துறையின் நோக்கமாகக் கருதப்படுகிறது. ஆகையால் நாரதரே உலகின் முதல் பத்திரிகையாளர் ஆவார்.
நாரதர் அளித்து வந்த செய்திகளின் சிறப்பைக் காண்போம். அவர் அளித்துவந்த செய்தி 100% நம்பத் தக்கதாகவும் உண்மை நிறைந்ததாகவும் இருந்தது. நாரதரை மறுத்தோ சந்தேகப்பட்டோ எவரும் கேள்வி எழுப்பவில்லை. இன்று தலைப்புச் செய்தி என்ற பெயரில் முழுமை பெறாத செய்திகளையும், தவறான செய்திகளையும், முற்றிலும் விசாரிக்கப்படாத செய்திகளையும் ஒளிபரப்புகின்றனர். இது கண்டிக்கத்தகுந்த, நீதிக்குப் புறம்பான பாவச்செயல்.
நாரதரின் மிக விசேஷமான அம்சம், சமுதாய நலனே நாடிய அவரது பார்வை. அவருடைய எந்த உரையாடலும் செய்தியும் சமுதாயத்திற்கு தீங்கு விளைவித்ததில்லை. நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பது அனுபவ அடிப்படை கொண்ட கூற்று. சமுதாய நலனுக்காகவே பத்திரிகைத் துறை என்பதற்கு நாரதரின் வாழ்க்கை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இளம் இதழியல் ஆர்வலரே, உங்களுக்கு
நாரதர் டிப்ஸ்
* நாரதர் ஒரு சிறந்த முன்னு தாரணம். உலகம் சுற்றுவதில் எடுத்துக்காட்டு.
* பத்திரிகைத் துறையின் ஒரே நோக்கம் செய்தியை கொண்டு சேர்ப்பதுதான். அதில் அரசியல் நோக்கமோ வியாபார நோக்கமோ ஏற்புடையதல்ல.
* புனையப்படும் செய்திகள் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் துரோகமாகும். உண்மை யைக் கூறு என்பதே பத்திரிக்கைத் துறையின் தாரகமந்திரம்.
* வெறுப்பு, விரோதம், நிராசை ஏற்படுத்துகின்ற செய்திகளை வெளிப்
படுத்தக் கூடாது. ஆகையால் சமுதாயத்தின் நலமும் முன்னேற்றமும் பத்திரிக்கைத் துறையின் தர்மம்.