குஜராத்தை பூர்வீகமாக உடைய, அமித் ஷாவிற்கு, 54 வயது தான் ஆகிறது. இந்த வயதிற்குள், அவரின் சாதனை பட்டியலில், பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த, 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற, அவரின் அரசியல் அணுகுமுறையும், வியூகங்களும் தான் காரணம் என்கின்றனர், அரசியல் நோக்கர்கள். பிரதமர் மோடியின் கண் அசைவில், அவரின் மூளை போல செயல்படுபவர், அமித் ஷா என்றால் மிகையில்லை.
லோக்சபா தேர்தலில், முதல் முறையாக வெற்றி பெற்று, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்ற, இரண்டே மாதங்களில், 70 ஆண்டுகளாக யாருமே செய்ய முடியாத, ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளை ரத்து செய்து, சாதனை படைத்துள்ளார். தினமும், ஏராளமான வீரர்களின் உயிரை காவு வாங்கும், ஜம்மு – காஷ்மீரில் நிலவும் பயங்கரவாதத்திற்கு சாவு மணி அடிக்கும் வகையில், அதை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி, புதுமையான முறையில், பிரச்னைக்கு தீர்வு கண்டு உள்ளார்.
இதன் மூலம், பா.ஜ.,வின் அடுத்த மாபெரும் தலைவராக, அமித் ஷா உருவெடுத்து உள்ளார். இப்போது, அக்கட்சியின் தலைவராக இருக்கும் அவர், நாட்டின் நலனுக்காக, இன்னும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதராக விளங்கிய, நாட்டின் முதல் உள்துறை அமைச்சர், சர்தார் வல்லபபாய் படேல், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, இந்தியா என்ற நாடு உருவாக பாடுபட்டார். அது போன்ற செயல் திட்டங்களை, அமித் ஷா மேற்கொண்டு வருவதால், நவீன இந்தியாவின், ‘இரும்பு மனிதர்’ என, அவர் போற்றப்படுகிறார்.
Sri Amitshaji should do something about the intense negative campaign in Tamil Nadu being conducted against Sri Modiji, BJP and generally against the present Indian Government, mainly by the media – both electronic and print.
I appeal to Vijaya Bharatham, RSS and BJP workers to escalate this message to the Central Government. Also, they should make an intense effort to amply publicise the benefits that the people of Tamil Nadu have received in the last five years.