நவம்பர் 8 கரன்ஸி மதிப்பிழப்பு அறிவிப்புக்கு ஆண்டு நிறைவு! ‘தேள்’ கொட்டி ‘திருடர்கள்’ திணறல்!

 

நவம்பர் 8 அன்று ஓர் ஆண்டு நிறைவு. கரன்ஸி  மதிப்பிழப்பு அறிவிப்பதற்குத் தான். எந்த நோக்கத்திற்காக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதோ அது நிறைவேறியுள்ளதா என்று மோடியை விமர்சனம் செயும் எதிர்க்கட்சிகளும், உண்டு கொழுத்த அதிகார வர்க்கத்ததிணல் முளைக்கும் களைகளும் கேள்வி எழுப்புகிறார்கள்.

கருப்புப் பண ஒழிப்பு

கரன்ஸி மதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் என்ன சொன்னார்? பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் நாட்டில் கருப்புப் பணம். 2016 நவம்பர் 8க்கு பின்னர், கள்ள நோட்டு புழகத்தினை ஒழிக்கவும் இதன் மூலம் போதைப் பொருட்கள் கடத்துவோர், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளுக்கு தாராளமாகப் பணம் கிடைப்பதை முற்றிலும் தடுக்கவும் இந்த நடவடிக்கை என்றார். பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதி தடுக்கப்பட்டுள்ளது, காஷ்மீரிலும் சத்தீஸ்கர் காடுகளிலும் கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலும் தடுக்க இயலவில்லை என்றாலும் அதிக அளவில் வருவது தடுக்கப்பட்டுள்ளது,  கருப்பு பணம் அதிகரிக்கும் வழி அடைபட்டுள்ளது.

கருப்பு பணம் 2016 நவம்பர் 8க்கு பின்னர் வங்கியில் டெபாஸிட்டாக வந்துள்ளது ரூ3.35 லட்சம் கோடியாகும். ரூ.500, ரூ.1000 வைத்திருந்தவர்கள் வங்கியில் துணிந்து கட்டிய டெபாஸிட் தொகை ரூ 2.90 வட்சம் கோடி.  வருமானவரித் துறையினர் பட்டியலிட்டு விசாரனை செது வருவதால் 2.90 லட்சம் கோடியின் தலைவிதி என்ன என்பது தெரிய வரும்.  ரூ.29,000 கோடி ரூபா வைத்திருந்தவர்கள், கருப்பு பணம் கூறி அபராத தொகையுடன் வட்டியும் கட்டியுள்ளார்கள்.   ஆகவே கரன்ஸி மதிப்பிழப்பால் கடந்த 10 மாதங்களில் அரசுக்கு வந்துள்ள கருப்பு பணத்தின் அளவு ரூ3.35 லட்சம் கோடி. இது மிகப் பெரிய சாதனை.

பூஜ்யம் இருப்புடன் துவங்கப்பட்ட பிரதம மந்திரி ‘ஜன் தன் யோஜனா’ கணக்குகளில் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள்  டெபாஸிட் செத தொகை ரூ.87,000 கோடி.  நவம்பர் 8க்கும் டிசம்பர் 28க்கும் இடையே புதிதாக துவக்கப்பட்ட ஜன்தன்  வங்கி கணக்குகள் 48 லட்சம்.  ஆகவே, ஜன்தன் கணக்கில் ரூ 2.5 லட்சத்திற்கு மேல் டெபாஸிட் செதவர்களின் கணக்கு ஆவுக்குட்பட்டுள்ளது.  இதன் மூலம் கருப்புப் பண முதலைகள் பிடிபடுவதுடன், கருப்புப் பண உற்பத்திக்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதற்கு இருந்த வங்கி அதிகாரிகளும் பிடிபட இருக்கிறார்கள்.  தனியார் வங்கியே அதிக அளவில் கருப்பு பணத்தை மாற்ற உதவி புரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளதால், அந்த வங்கிகளின் உரிமங்கள் ரத்து ஆவதற்குக் கூட வழியுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு பணம் தடுப்பு

ஆண்டு ஒன்றுக்கு பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் நிதியின் அளவு ரூ700 முதல் 800 கோடி வரை. உளவு துறையினர் இதைக் கண்டறிந்து தெரிவித்தார்கள்.  இதில் மாவோயிஸ்ட்களுக்கு வருடத்திற்கு 300 முதல் 400 கோடி ரூபா வரையிலும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ரூ.30 முதல் 50  கோடி வரையிலும் கிடைக்கிறது.  வடகிழக்கு எல்லைப் புற மாநிலங்களில் தீவிரவாத குழுக்களுக்கு ரூ.300 கோடிக்கு மேல் கிடைக்கிறது.  இவ்வாறு கிடைக்கும் பணம், ஹவாலா மூலமாகவும் கள்ள நோட்டு புழகத்தில் விடுவதாலும் கிடைக்கிறது.

நோட்டுத் தடையால்  சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மாவோயிஸ்ட்களிடமிருந்த ரூ.700 கோடி பயனற்றுப் போவிட்டது.   வர்த்தகரிடமும் ஒப்பந்தக்காரர்களிடமும் பெற்ற பணத்தை அவர்களே மாற்றிக் கொடுக்கும்படி மாவோயிஸ்ட்கள் கேட்ட சம்பவங்களும் உண்டு.  பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் தாக்குதல்கள் 60 சதவீதம் குறைந்துள்ளது.   மாவோயிஸ்ட்களிடம் இருந்த நிதியின் அளவு ரூ7,000 கோடி அதிகாரி அனில் ஏ.அத்லே கூறியுள்ளார். இந்த நிதி பஸ்தர் மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட்களிடமிருந்தது.

நவம்பர் 8ம் தேதிக்கு பின்னர் இந்த பணம்  மதிப்பிழந்ததன் காரணமாக, அறிவிப்பு வெளியிட்டு 28 நாட்களுக்குள் 584 மாவோயிஸ்ட்களும் பின்னர் 469 மாவோயிஸ்ட்களும் சத்தீஸ்கர் மாநில அரசிடம் சரணடைந்துள்ளார்கள்.

காஷ்மீரில் கல்லெறிய காசில்லை

காஷ்மீரில் வாரத்திற்கு இரண்டு முறையாவது காவல் துறையினர் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் நடந்த கல்லெறி சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன.  ஏன் என்றால், கல்லெறியும் இளைஞர்களுக்கு ரூ.1000 கொடுக்க வேண்டும். மேற்படி நிதி கிடைக்கும் ஹவாலா வழி முற்றிலும் தடுக்கப்பட்டது. பிரிவினைவாதிகள் கூட்டம் சேர்ப்பதற்காகவே வேலையில்லாத முஸ்லிம் இளைஞர்களை இதற்கு பயன்படுத்தினார்கள்.   இதன் காரணமாக 50 சதவீத ஹவாலா  பண பரிவர்த்தனை குறைந்துள்ளது.  கள்ள நோட்டு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.  கள்ள நோட்டு வருவதைத் தடுப்பதற்காக புதிய ரூபா நோட்டில் பாதுகாப்பு அம்சங்கள் அதிக அளவில் புகுத்தப்பட்டுள்ளன.  நவம்பர் 8ந் தேதிக்கு முன் பயங்கரவாதிகளிடமிருந்து கோடிக் கணக்கான ரூபா நோட்டுகள் வெறும்  எனவே கடந்த நான்கு மாதங்களாக காஷ்மீர் பகுதியில் அமைதி திரும்பி வருகிறது என்பதே கரன்ஸி மதிப்பிழப்பு திட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 12.35 கோடி ரூபா கள்ள நோட்டு பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வருமான வரி அமோக வளர்ச்சி

2012-ல் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையில் நாட்டு மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களே வருமான வரி கணக்கு தாக்கல் செவதாகவும், கணக்கு தாக்கல் செதவர்களில்  மத்திய மாநில அரசு ஊழியர்களைத் தவிர வருமான வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. நோட்டுத் தடையால்  வருமான வரி கட்டுபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.  2014 – 2015-ல் 1.23 கோடியாக 2015 – 2016-ல் 1.63 கோடியாகவும், நோட்டுத் தடையால், 2016 -2017-ல் 1.96 கோடியாகவும் ஆகியுள்ளார்.

வரி பாக்கி வைத்திருப்பவர்கள் பழைய நோட்டுகளை கொண்டு வரி செலுத்தலாம் என்ற அறிவிப்பின் காரணமாக 200 சதவீத வரி வசூலிக்கப்பட்டது.  இன்னும் 26,000 கோடிக்கு கணக்கு வரவில்லை என்பதால், வருமான வரி துறையினரின் விடா முயற்சியின் காரணமாக பதுக்கிய பணம் வெளி வர  தொடங்கியுள்ளது.

இந்த அதிரடி அறிவிப்பு எனும் ‘தேள்’ கொட்டியதில் ‘திருடர்கள்’ திணறித் திக்குமுக்காடுவது பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாய்ச்சலுக்கு கட்டியம் கூறுகிறது!