நமது பாரத தேசம் உலக அரங்கில் நன்கு முன்னேற்றம் அடைய உதவும் வழிகளில் மிக முக்கியமானது நம் மாணவர்களின் கல்வியறிவு. தங்கள் கல்வியறிவை எந்த அளவுக்கு கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் முன்னேற்றம் அடைவதோடு, நம் தேசத்தையும் முன்னேற்றம் அடையச் செய்கிறார்கள். கல்வியில் முன்னேற மிக முக்கியமான ஐந்தை கடைபிடித்தால் போதும்.
மாணவ மாணவிகள் தங்கள் உடல்நலத்தை நன்கு பேண வேண்டும். அதற்கு எளிய உடற்பயிற்சிகள், யோகாசனப் பயிற்சிகள், சூரிய நமஸ்காரப் பயிற்சிகள், விளையாட்டுகள், ஆரோக்கியமான உணவுகள், தேவையான அளவு உறக்கம், ஓய்வு, போன்றவை அவசியம் தேவை.
மன நலத்தையும் நன்கு கவனித்து கொள்ளவேண்டும்.
மன நலத்தை நன்கு வைத்திருக்க தியானப் பயிற்சிகள், பராணாயாம பயிற்சிகள், தெய்வ வழிபாடுகள் உதவும்.
குழப்பங்கள் நீங்க சுய பரிசோதனை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நம் மனதை நாமே கூர்ந்து கவனிக்க வேண்டும். வீட்டைக் கூட்டி குப்பைக்கூளங்களை வெளியில் போடுவதைப் போல், எது நம் கல்வி லட்சியத்திற்கு உதவாதோ அது எல்லாம் வெளியில் கொட்டப்பட வேண்டிய குப்பைகள்.
கல்வியில் சிறந்து விளங்க மன ஒருமைப்பாடு மிக முக்கியம். எந்த அளவுக்கு நன்கு நம் மனதை குவிக்க செய்கிறோமோ அந்த அளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற முடியும். நம் மனம் ‘படிப்பு’ என்று எடுத்துக்கொண்ட நோக்கத்தைத் தவிர வேறு எந்ததெந்த வழிகளில் கவனச்சிதறல் என்பதை கண்டறிந்து அவைகளை உறுதியும் நீக்க வேண்டும். மன ஒருமைப்பாடே வெற்றியின் ரகசியம்.
கல்வியறிவுக்கு உதவும், வாழ்வின் முன்னேற்றத்திற்கு உதவும் ‘நல்ல பழக்கங்களை’ பழகிக்கொள்ள வேண்டும். பழகுதல், நன்மை தரும் நூல்களை படித்தல், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல், நற்சிந்தனைகளில் ஈடுபடுதல், தேசப்பற்றுடன் இருத்தல், தெளிவாகப் பேசுதல், எழுத்துப் பயிற்சிகள், நல்ல திறமைகளை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற பற்பல நல்ல பழக்கங்களை பழகிக் கொள்ள வேண்டும். பழக்கங்கள் சிலந்தி வலை போன்றது. பழகப் பழக அதுவே இரும்புச் சங்கிலியாக மாறிவிடும். ஆகையால் நல்ல பழக்கங்களை கண்டறிந்து பழகிக் கொண்டால், தீயப் பழக்கங்கள் நம்மை விட்டு விலகிவிடும்.
மேலும் அந்த அந்த நாட்களுக்குரிய பாடங்களை அன்றே படித்தல், தேர்வு எழுதுவது போல் பலமுறை எழுதிப் பார்த்தல், நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பாடங்களை பற்றி கலந்துரையாடுதல், நூல
நூலகங்கள் சென்று நல்ல நூல்களை வாசித்தல் போன்றவைகளைக் கடைப்பிடித்தால் மாணவர்கள் சிறந்தோங்கலாம்.