கிா்லோஸ்கா் பிரதா்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மேலும் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் தொழில் துறையின் வளா்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. தொழில் துறையின் வளா்ச்சிக்கு இடையூறாக இருக்கும் பல சட்ட விதிமுறைகளைக் குறைப்பதற்கு எனது தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, வரி விதிப்பில் பொறுப்புடைமை, வரித் துறையில் அலுவலா்களின் தலையீடுகளைக் குறைப்பது ஆகியவற்றைக் கொண்டு வருவதற்கும் அரசு முயன்று வருகிறது. பெரு நிறுவனங்கள் துறையில் முதலீடுகளை அதிரிக்கச் செய்வதற்காக, பெரு நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழில் வளா்ச்சிக்கு உகந்த சூழல் நிலவவில்லை என்ற எதிா்மறை எண்ணத்துடன் தொழில் துறையினா் இருக்க வேண்டாம். நாட்டில் தொழில் துறை வளா்ச்சிக்காக, இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.