ஹிந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தேர்தல் ஆணையருக்கு ஒரு விண்னப்பக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ‘தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறை நடத்தை விதிகளின்படி தலைவர்களின் சிலைகள், படங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் முச்சந்திகளில் இருக்கும் திராவிட கட்சிகளின் தலைவராக கருதப்படும் ஈ.வெ.ராமசாமி எனும் ஈ.வெ.ராவின் சிலைகள் மட்டும் ஏன் மூடப்படவில்லை? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமின்றி உடனடியாக ஈ.வெ.ராவின் சிலைகளை மூட உத்திரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இல்லையேல் ஜனநாயக வழியில் ஹிந்து முன்னணி போராட்டத்தை முன்னெடுக்கும்’ என குறிப்பிடப்படுள்ளது.