ஜனசங்கத்தின் தலைவரும் ஆர்.எஸ்.எஸ், பிரச்சாரகருமான பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் நினைவு தினம் பிப்ரவரி 11 அன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, இளைஞர்களின் தோழன் தீன் தயாள் உபாத்யாயா” என்ற பா.ஜ.க.வின் தேசிய அமைப்புச் செயலாளர் ராம் லால் வெளியிட்டார்.
தீன்தயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை வரலாறு, இன்றைய இளைஞர்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. சிறிய வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்து, தனது மாமாவின் வீட்டில் வளர்ந்த அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்வதற்கு முன்னர், தனது மாமாவிற்கு எழுதிய கடிதத்தை உணர்வு பூர்வமாக படித்துக் காட்டினார் ராம் லால்ஜி. தான் நாட்டுக்கு சேவை செயவேண்டியதன் அவசியம் குறித்தும் அதற்கு ஆர்.எஸ்.எஸ். தான் சரியான தளம் என்றும் எழுதியிருந்த உபாத்யாயா, பிற்காலத்தில் அரசியல் களத்தில் பங்கெடுக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து ஜனசங்கத்தை தோற்றுவித்த விதத்தையும் ராம்லால் விளக்கிக் கூறினார்.