தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக் கழகத்துக்கு நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் ஒப்புதல் கிடைத் துள்ளது. இது வரும் கல்வியாண் டில் தொடங்கும் வாய்ப்புகள் உள்ளன.
நாடு முழுவதிலும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நடத்தும் சம்ஸ்கிருதக் கல்வி நிறுவனங்கள் மொத்தம் 17 உள் ளன. இவை கடந்த 1791 ஆம் ஆண்டு முதல் 2018 வரை தொடங் கப்பட்டவை. இவை உத்தர பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. இதில், நான்கு பழமையான சம்ஸ்கிருதக் கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நிர்வகித்து வருகிறது. டெல்லியின் ராஷ்டிரிய சன்ஸ்கிருதி சன்ஸ்தான் மற்றும் ஸ்ரீலால் பகதூர் சாஸ்திரி ராஷ் டிரிய சன்ஸ்கிருத் வித்யாபீட், ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ராஷ்டிரிய சன்ஸ்கிருத் வித்யா பீடா, மத்தியபிரதேசத்தின் உஜ் ஜைனியில் உள்ள மகரிஷி சண்டிபாணி ராஷ்டிரிய வேதா வித்யாபிரதீஷ்தான் ஆகிய 4 கல்வி நிறுவனங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்தி வருகிறது. இவற்றில் முதல் மூன்றை தேசியப் பல்கலைக்கழக மாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கான திட்ட அறிக்கையை மத்திய நிதி அமைச் சகம், நிதி ஆயோக் ஆகியவற்றின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தது. இதற்கு அந்த அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன.
‘சர்வதேச அளவில் யோகா கல்வியை போல், சம்ஸ் கிருத மொழியையும் வளர்ச்சி அடையச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 3 சம்ஸ்கிருதக் கல்வி நிறுவனங் களை தேசியப் பல்கலைக்கழகங் களாக உயர்த்த நிதித்துறை, நிதி ஆயோக்கின் ஒப்புதலை அடுத்து சட்ட அமைச்சகத்தின் ஒப்புத லுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்’ எனத் தெரி வித்தன.
டெல்லியின் ராஷ்டிரிய சன்ஸ் கிருதி சன்ஸ்தான் 1970-லும், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சன்ஸ்கிருத் வித்யாபீட் 1962-லும், திருப்பதியில் உள்ள ராஷ்டிரிய சன்ஸ்கிருத் வித்யாபீடா 1961-லும் தொடங்கப்பட்டன. இந்த மூன்று சம்ஸ்கிருத மொழி ஆய்வு நிறு வனங்களுக்கும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) தன்னாட்சி பல்கலைக் கழக அந்தஸ்தை ஏற்கனவே அளித்துள்ளது.
இதேபோல், மத்திய அரசு தமி ழுக்காக தொடங்கி நடத்தும் ஒரே அமைப்பான செம்மொழி தமி ழாய்வு மத்திய நிறுவனம் சென்னை யில் அமைந்துள்ளது. இது சிறப் பாக செயல்படும் பொருட்டு அந் நிறுவனமும் தேசியப் பல்கலைக் கழகமாக மாற்றப்படவும் வழிகள் உள்ளன. ஆனால், அதன் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் இயக் குநர் பதவியே இன்னும் அமர்த் தப்படாமல் உள்ளதால் அது இப்போதைக்கு சாத்தியமில்லாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.