தேசியக்கொடியும் காவிக்கொடியும்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர் டாக்டர். மோகன் பகவத், கடந்த 2018 செப்டம்பர் 17 முதல் 19 வரை டெல்லியில் நடைபெற்ற ‘பவிஷ்ய கா பாரத்’ என்ற மூன்று நாள் விரிவுரைத் தொடரில், மூவர்ணக்கொடி மற்றும் காவிக்கொடி (பகவ த்வஜ்) பற்றிய சங்கத்தின் நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு சமகாலப் பிரச்சினைகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பார்வையை முன்வைத்தார்.

சுதந்திரம் 75, மற்றும் வீடுகள்தோறும் தேசியக்கொடி இயக்கத்தை முன்னிட்டு அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய சில கருத்துகளின் சுருக்கம்:

“எங்கள் சங்கம் சுயசார்பு கொண்டது. எதைச் செலவழிக்க வேண்டுமோ அதை நாமே ஏற்பாடு செய்கிறோம். இந்த அமைப்பை நடத்துவதற்கு வெளியில் இருந்து ஒரு பைசா கூட நாம் வாங்குவதில்லை. யாராவது எங்களிடம் பணம் கொண்டு வந்தால்கூட, அதை நாங்கள் திருப்பித் தருகிறோம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், குருவாக போற்றும் பகவ த்வஜுக்கு ஒவ்வொரு ஆண்டும் குருதட்சிணை வழங்குவார்கள். அப்படி வரும் ஸ்வயம்சேவகர்களின் குருதக்ஷிணையை மட்டுமே சங்கம் முழுமையாகச் சார்ந்திருக்கிறது.

காவிக்கொடி ஏன் நமது குரு? ஏனென்றால் அது நமது பழங்கால பாரம்பரியத்தின் அடையாளம். வரலாற்றை மேற்கோள் காட்டும் போதெல்லாம், காவிக்கொடி எப்போதும் இருக்கும். சுதந்திர பாரத்த்தின் கொடி எதுவாக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டபோதும், கொடி கமிட்டி தனது அறிக்கையில் நன்கு அறியப்பட்ட மற்றும் மரியாதைக்குரிய பகவ த்வஜ தான் தேசியக் கொடியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

பின்னர், மாற்றங்கள் செய்யப்பட்டு மூவர்ணக் கொடி வந்தது. அதுதான் நமது தேசியக் கொடி. அதன் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஷாகாவில் ஏன் ‘பகவ த்வஜ’ ஏற்றப்படுகிறது, தேசியக் கொடி ஏன் ஏற்றப்படுவதில்லை என்ற கேள்வியும் சில சமயங்களில் எழுப்பப்படுகிறது.

சங்கம் மூவர்ணக் கொடியின் கண்ணியத்துடன் அதன் பிறப்பிலிருந்தே நெருங்கிய தொடர்புடையது. ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறேன். மூவர்ணக்கொடியை தேர்ந்தெடுக்க முடிவு எடுக்கப்பட்ட பிறகு, அதில் ராட்டை சின்னம் இடம்பெற்றிருந்தது. அசோக சக்கரம் அல்ல. ஃபைஸ்பூர் காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முறையாக ஏற்றப்பட்டது. கூட்டத்திற்கு நேரு தலைமை தாங்கினார். கொடி கம்பம் 80 அடி உயரம் இருந்தது. இடையில் கொடி சிக்கிக் கொண்டது. அப்போது அவ்வளவு உயரத்தில் ஏறி அதைச் சரிசெய்ய யாருக்கும் தைரியம் இல்லை.

திடீரென்று, கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் முன்னால் வந்தான். முன்னோக்கி ஓடி, கம்பத்தில் ஏறி, முடிச்சுகளை அவிழ்த்து, கொடியை உயர்த்தி கீழே ஏறினான். நேரு, அவரது முதுகில் தட்டிக்கொடுத்தார். அவருக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்காக மாலையில் நடைபெறும் திறந்த அமர்வுக்கு வர சொன்னார். அப்போது சில காங்கிரஸ் தலைவர்கள் சென்று, அந்த இளைஞர் ஷகாவுக்கு செல்வதால் அவரை அழைக்க வேண்டாம் என்று கூறினர். ஜல்கானில் வசிக்கும் ஸ்ரீ கிஷன் சிங் ராஜ்புத் என்பவர் இதைச் செய்த ஸ்வயம்சேவகர் ஆவார். டாக்டர். ஹெட்கேவார் இதைகுறித்து அறிந்ததும், அவர் அவரைச் சந்திக்கச் சென்றார். அவரைப் பாராட்டுவதற்காக ஒரு வெள்ளி உலோகப் பானையைக் கொடுத்தார். எனவே, முதன்முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதிலிருந்து, ஸ்வயம்சேவகர்களின் மரியாதை அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கிஷன் சிங் ராஜ்புத் சில வருடங்களுக்கு முன்பு தான் இறந்துவிட்டார்.

லாகூர் அமர்வில் முதன்முறையாக காங்கிரஸ் முழு சுதந்திரத்திற்கான தீர்மானத்தை நிறைவேற்றியபோது, ​​டாக்டர் ஹெட்கேவார் அனைத்து ஷாகாக்களும் கூட்டங்களை நடத்தி காங்கிரஸைப் பாராட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த தீர்மானங்கள் காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையை வெளியிட்டார். இது 1931ல் நடந்தது. சுதந்திரம் பெறுவதும், தேசத்திற்கு மிகுந்த புகழை அடைவதும்தான் டாக்டர் ஹெட்கேவாரின் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள். சங்கத்தில் வேறு என்ன இருக்க முடியும்? அதனால்தான் ஸ்வயம்சேவகர்கள் சுதந்திரத்தின் அனைத்து சின்னங்களுக்கும் மிகுந்த மரியாதை அளிக்கின்றனர். அவற்றுக்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ளனர். சங்கத்தில் வேறு எதுவும் பேச முடியாது”.