டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சி.ஏ.ஏ வன்முறை கலவரத்தின் போது டெல்லியில் ‘வெறுப்புணர்வு பிரச்சாரங்கள் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யு) மாணவர் ஷர்ஜீல் இமாம். இவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி கர்கர்தூமா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமாக செயல்படுதல், சட்டவிரோத நடவடிக்கைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஷர்ஜீல் இமாம், ஷாஹீன் பாக் போராட்டத்தின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல இடங்களில் தேசவிரோத உரைகளை நிகழ்த்தினார். 2020 ஜனவரியில் பீகாரில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.