அரசியல் சாஸன ஷரத்து 370 ரத்து செய்யப்பட்ட பின் நடக்கும் முதல் ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தல் தலைப்புச் செய்தி ஆகியுள்ளது. ஆம், தேர்தலேதான். பயங்கரவாதிகள் ஒருபுறம் ரத்தக்களரி நடத்தி வந்தார்கள். பிரிவினைவாதிகள் மறுபுறம் தேசத்தை துண்டாடும் சதி செய்து வந்தார்கள். ஊழல் செய்து செய்து ஊரை அடித்து உலையில் போட்டுக் கொழுத்த மூன்று கொடூர குடும்பங்கள் நடத்தி வந்த வாரிசு தர்பார் இன்னொரு புறம், … 370 ஐ ஒழித்து மாநில மக்களை இந்த எல்லாவற்றிலிருந்தும் விடுவித்தவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் பயமின்றி ஓட்டுச்சாவடி சென்றார்கள். விளைவு? முதல் கட்ட வாக்குப் பதிவின்போது “இது வரலாறு காணாத காட்சி” என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே பிரமிக்கச் செய்த 70 சதவீத வாக்குப் பதிவை சாதித்தார்கள்!
நிலத்தில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள். மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு. இதில் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தின் 12 மாவட்டங்களில் உள்ள 52 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. சராசரி ஜம்மு சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கையை விட காஷ்மீர் பள்ளத்
தாக்கில் எண்ணிக்கை குறைவு. 1952லிருந்து இந்த வேறுபாடு தொடர்கதையாகவே இருக்கிறது, இது ஒரு சவால்தான்.
தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்து நிற்கிறார்கள். மக்கள் ஜனநாயக கட்சியும் இத்தேர்தலில் போட்டியிடுகிறது. இரண்டு கூட்டணிகளுக்கும் எதிராக பாரதிய ஜனதா கட்சியும் போட்டியிடுகிறது. இந்த மும்முனைப் போட்டியுடன், சில உதிரி கட்சிகளும் இணைந்து நான்காவது அணியாக போட்டியிடுகிறது. தேசிய மாநாட்டு கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும் ‘ஜம்மு–-காஷ்மீர் பகுதியில் மீண்டும் 370 ஐ கொண்டு வருவோம். முந்தைய சட்டமன்றத்தில் ஆண்டு 2000ல் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை அமுல்படுத்துவோம்’ என்ற தங்கள் ஆசையை தேர்தல் அறிக்கையில் சொல்லி பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து வாக்காளருக்கு ஆசை காட்டி தேர்தலை சந்திக்கிறார்கள்.
ஃபரூக் அப்துல்லா தலைமையிலான பரூக், உமர் அப்துல்லாக்களின் தேசிய மாநாட்டுக் கட்சி மாநிலத்தில் 1953க்கு முந்தைய நிலையை மீட்டெடுக்கும் தீர்மானத்தை மீண்டும் செயல்படுத்துவோம் என்று பேசியது. (தனி அரசியல் சாஸனமாம், ராணுவம், வெளிநாட்டு தொடர்பு, உள்ளிட்ட
வற்றை தவிர்த்து அதிகாரங்கள் அனைத்தும் காஷ்மீர் மாநில அரசுக்கு உண்டாம்!) எல்லாம் பிரிவினைக்கும், பாகிஸ்தான் பயங்கரவாதம் அரங்கேறவும் பாதைபோடும் உத்தி. தேசத்தின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் 370 ஐ மீண்டும் கொண்டு வருவோம் என இவர்கள் கூறுவதை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறதா?
மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவாக பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்
துள்ளது. பிரிவினையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் கட்டுப்பாடு கோடு நெடுக கிராஸ் லைன் ஆஃப் கன்ட்
ரோல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்றால் வேறென்ன?
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி அமெரிக்காவில் சில பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்களை சந்தித்ததுதான் அக்கிரமம்.
தேச விரோத மதவாத பயங்கரவாதிகளால் வேட்டை
யாடப்பட்ட காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் ஹிந்துக்கள் பல பத்தாண்டுகளுக்கு பின் காஷ்மீரில் வாக்களித்தது புது வரலாறு அல்லாமல் வேறென்ன? “நாங்கள் முன்பு போல காஷ்மீரில் குடியேற வேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது” என்று ஹிந்துக்கள் திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.
பாஜகவின் 2014 தேர்தல் சாதனை இங்கே குறிப்பிடத்தக்கது. ஜம்முவில் ஹிந்துக்கள் ஆதிக்கம் உள்ள பகுதியில் 46 சதவீத வாக்குகள் பெற்று 24ல் 19 இடங்களை வென்றது மட்டுமல்லாமல் அங்கே முஸ்லிம் ஆதிக்கமுள்ள பகுதியில் 13 ல் 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. 2022ன் தொகுதி மறுசீரமைப்பால் ஜம்முவிற்கு 6 தொகுதிகள் வேறு கூடுதலாக கிடைத்திருக்கிறது! அங்கே பழங்குடி
யினருக்கு ஒன்பது இடங்கள் ஒதுக்கீடாய் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜம்முவில் முழு வெற்றி பெற்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய கட்சிகளும் சுயேச்சைகளும் வளைந்து கொடுக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சி அமைக்கலாம் என்கிறது இந்தியா டுடே. இருப்பினும் சவால்களுக்குப் பஞ்சமில்லை.
அக்டோபர் 8-ந் தேதி தேர்தல் முடிவு தெரியும்.
கட்டுரையாளர் : எழுத்தாளர்