தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அட்டூழியங்களும், அராஜகங்களும் உக்கிரமடைந்து வருகின்றன. தெலுங்கானாவில் ஒரே கட்டமாக மே மாதம் 13ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே வனவாசிகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள் சரமாரியாகத் தாக்கினார்கள். இது மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அஸிபாபாத் கோமரம்பீம் மாவட்டத்தில் உள்ள ஜெய்நூர் மண்டல் பகுதியில் வனவாசிகளே பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாவட்டத்தில் 434 கிராமங்கள், சிற்றூர்கள் உள்ளன. தேர்தல் தினத்தன்று வடிராபஸ்தியில் மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டிருந்தார்கள். நண்பகல் 12 மணியளவில் சாலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நடந்து சென்றிருந்தார். அப்போது மோட்டார் பைக்கில் வெகு வேகமாக வந்த நபர், நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது இடித்தார். இருவருக்குமிடையே வாய் தகராறு வலுத்தது. இது கைகலப்பாக முற்றியது. இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினார்கள்.
அருகே இருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து இருவரும் கலைந்து சென்றார்கள். ஆனால் ஒரு மணி நேரத்துக்கள் நிலைமை அடியோடு மாறி விட்டது. 600க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அங்கு அணிதிரண்டு வந்தனர். அவர்களது கைகளில் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. முஸ்லிம் அடிப்படைவாதிகள், வடிராபஸ்தியைச் சேர்ந்த வனவாசிகளை மிருகத்தனமாகத் தாக்கினார்கள். அந்த இடமே ரத்தக் களறியானது. குறிப்பாக இளம்பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூர நிகழ்வுகளை அரங்கேற்றினார்கள்.
ஒரு முஸ்லிம், 6 மாத பச்சிளம் குழந்தையைத் தூக்கி எறிந்த காட்சி ஊடகங்களில் வைரலானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பச்சிளம் குழந்தை உயிர் பிழைத்தது. கடுமையாக தாக்கப்பட்டதால் வடிராபஸ்தியைச் சேர்ந்த பாயில் மெதுலா கங்காராம், என்.பரசுராம், மர்சிகோலா லட்சுமண் ஆகியோர் படுகாயம் அடைந்து வேதனையால் துடித்தார்கள். அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் மர்சிகோலா லட்சுமண் கடும்பாதிப்புக்கு ஆளாகி இருந்ததால் அவரை அடிலாபாத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். முஸ்லிம் அடிப்படைவாதிகள் அரங்கேற்றிய அராஜகம் தெலுங்கானாவில் வனவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“வடிராபஸ்தியைச் சேர்ந்த வனவாசிகள் மீது முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூரத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வனவாசிகளை வதைத்த முஸ்லிம் அடிப்படைவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று தெலுங்கானா மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் இணைச் செயலாளர் டாக்டர் சசிதர் அறிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகார் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அஸிபாபாத் கோமரம்பீம் ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் உடனே செய்து கொடுக்குமாறு பணித்தது. சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில டிஜிபி பணிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற இடம், அடிலாபாத் மக்களவை தொகுதி வரம்புக்குள் வருகிறது. வடிராபஸ்தி மோதல் திடீரென ஏற்பட்டதல்ல. இதைப்போல பல நிகழ்வுகள் ஏற்கெனவே அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. வனவாசிகளை முஸ்லிம்கள் வதைப்பதற்கு உள்நோக்கம் உள்ளது. வனவாசிகளை விரட்டி விட்டால் அந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்து விடலாம் என்பதுதான் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் மோசமான எண்ணமாகும்.
காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அராஜகம் உக்கிரமடையத் தொடங்கி விடும். இவர்களுக்கு ஏ.ஐ.எம்.ஐ.எம் என்ற ஒவைசி கட்சியின் ஆதரவும் பெருகிவிடும்.
இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோட்டார் பைக்கை ஓட்டி வந்த நபர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் வடிராபஸ்தியில் வாழ்ந்து வரும் வனவாசிகள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் இவை பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டது. 13 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 7 வனவாசிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் குழந்தைகளாவர். தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். அடிலாபாத் சட்டமன்றத் தொகுதி பாஜக வசம் உள்ளது. அடிலாபாத் எம்.எல்.ஏ. சங்கர் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்று வனவாசிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார். வடிராபஸ்தி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர்களது உடைமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. வனவாசி மக்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் என்று எம்.எல்.ஏ. சங்கர் அறிவித்தார்.
இந்த பகுதியில் உள்ளவர்கள் கோண்டுவானா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் வாழும் பெரியவர்கள் ஒரு குழுவை அமைத்து எந்தப் பிரச்சினை என்றாலும் பேசித் தீர்த்து கொள்ளுகிறார்கள். இந்த பஞ்சாயத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. கோண்டுவானா பஞ்சாயத்தின் கெளரவத் தலைவராக செயல்பட்டு வரும் கனக யாதவராவ், “ஜெய்நூர் மண்டலில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அடாவடித்தனம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு வனவாசி மீது நடத்தப்படும் தாக்குதலை தனிநபர் மீதான தாக்குதலாக எடுத்துக்கொள்ள முடியாது. இதை வனவாசி சமூகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். முஸ்லிம் அடிப்படைவாதிகள் பொருளாதாரரீதியான ஆதாயத்தை கருத்தில் கொண்டு வனவாசிகளை அவர்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள். எனவே முஸ்லிம் அடிப்படைவாதிகளை இப்பகுதியிலிருந்து வெளியேற்றினால்தான் நீதியும், நியாயமும் நிலைத்திருக்கும். உடனடியாக முஸ்லிம் அடிப்படைவாதிகளை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வற்புறுத்தியுள்ளார்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி