உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் தலத்தில், 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடைபெற்றது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அரிய நிகழ்ச்சி இது. தீர்த்த ராஜ் என்று கொண்டாடப்படும் புனிதமான பிரயாக்ராஜில் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தாத “ஹரித் கும்பமேளா” (பசுமை கும்பமேளா)வாக விளங்க வேண்டும் என்று ஹிந்து சமுதாயம் முடிவு செய்தது.
45 நாட்கள் நடைபெறும் மஹா கும்பமேளாவில் 40 கோடி யாத்ரீகர்கள் கூடுவார்கள் என்று ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டது. ஆனால் கும்பமேளா நிறைவடைய 10 நாட்கள் இருந்த நிலையில் 52 கோடி பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடினர். சுமார் 50 லட்சம் யாத்ரீகர்கள், அல்லது ‘கல்ப வாசிகள்’, கும்பமேளாவில் நிரந்தரமாக வசித்து வந்தனர். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் உண்மையில் பிரயாக்ராஜின் மக்கள்தொகையை விட 20 மடங்கு அதிகம். இதனுடன் தினசரி பக்தர்களின் வருகையும் சேர்ந்து, எந்த ஒரு நாளிலும் கோடிக்கு அதிகம்.
அரசாங்க மதிப்பீட்டின்படி, பக்தர்களால் பிளாஸ்டிக் மற்றும் தூக்கி எறியும் பொருட்கள் வடிவில் 40,000 டன் குப்பைகள் உருவாகியிருக்க வேண்டும், இது புனித திரிவேணி சங்கமத்தை மாசுபடுத்தும். ஆனால் ‘ஒரு தட்டு ஒரு பை’ உத்தி மகா கும்பத்தை முடிந்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்ற முயன்றது – வெற்றியும் பெற்றது. எப்படி என்பதைப் பாருங்கள்:
உத்திக்கு வெற்றி
குறைக்கப்பட்ட தூக்கி எறியும் கழிவுகள்: மகா கும்பத்தில் ஒருமுறை பயன்படுத்தி வீசும் தட்டு, கிண்ணம் பயன்பாடு 80–85% குறைந்தது.
கழிவுகளில் குறைப்பு: கழிவு அளவு சுமார் 29,000 டன்கள் குறைந்துள்ளது, அதே நேரத்தில் மொத்த கழிவுகள் முன்னர் மதிப்பிடப்பட்டபடி 40,000 டன்களுக்கு மேல் ஆகியிருக்கும்.
செலவு சேமிப்பு: தூக்கி எறியும் தட்டுகள் கிண்ணங்கள் செலவு ஒரு நாளைக்கு ₹ 3.5 கோடி சேமிக்கப்பட்டது, இது 45 நாள் நிகழ்வில் மொத்தம் ₹ 140 கோடி. (போக்குவரத்து, எரிபொருள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற செலவுகள் சேர்க்காமல்).
உணவு வீணாவதைக் குறைத்தல்: மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகளில் உணவு பரிமாறுவதால் உணவு மிச்சம் வைத்து வீணாவதை 70% குறைத்தது.
சமூக சமையலறைகளுக்கான சேமிப்பு: அரங்கம், கடைகள், ஆகியவற்றுக்கு குறிப்பிடத்
தக்க செலவு சேமிப்பு, இல்லையெனில் ஒரு முறை பயன்பாட்டு பொருள்களுக்காக கோடிக் கணக்கில் செலவாகியிருக்கும்.
நீண்ட கால விளைவுகள்: கும்பமேளாவில் விநியோகிக்கப்படும் எவசில்வர் தட்டுகள் பல ஆண்டுகள் பயன்படுத்தப்படும், இது தொடர்ந்து கழிவுகளையும் செலவையும் குறைக்கும்.
கலாச்சார மாற்றம்: இந்த முயற்சி பொது நிகழ்வுகளுக்கான “பாத்திர வங்கி” என்ற உத்தியை அளித்துள்ளது, இது சமூகத்தில் நிலையான பயன்தரும் நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.
ஊரார் பங்கேற்பு: இந்த பெரிய அளவிலான இயக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது என்றால், காரணம் பொதுமக்கள் பங்கேற்பு மட்டுமே, 2,241 நிறுவனங்கள் உன்னதமான நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயல்பட்டன.
மத்திய மாநில அரசுகள்
பசுமை கும்பமேளா எனும் இலக்கை அடைய அரசுகள், மாநில, மத்திய அரசுத் துறைகள் சிறப்பான முறையில் செயல்பட்டன. அரசு 10,000க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை பணியமர்த்தியது. அந்த மெகா நிகழ்வு முழுவதும் சுகாதாரத்தைப் பராமரிக்கும் நோக்கில் கூடுதலாக, மகா கும்பமேளா முழுவதும் 1.5 லட்சம் கழிப்பறைகள் பைகள் பொருத்தப்பட்ட 25,000 குப்பைத் தொட்டிகள் நிறுவப்பட்டன, மகா கும்பமேளா முயற்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளும் முழு வீச்சில் நடைபெற்றது:
மகா கும்பமேளாவில் கழிவு மேலாண்மை மற்றும் நகர்ப்புற சேவைகளை வழங்குவதை ஆய்வு செய்ய சர்வதேச புகழ்பெற்ற நிறுவனங்களின் சேவை ஈடுபடுத்தப்பட்டது. ஹார்வர்ட் வணிகப் பள்ளி, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச நிதிக் கழகம், மைக்ரோசேவ், கேட்ஸ் அறக்கட்டளை, ஐஐஎம்-இந்தூர் போன்றவை அந்த நிறுவங்களில் சில.
ஹார்வர்ட் வணிகப் பள்ளி உணவு பானங்கள் வழங்கல், நகரங்களுக்கு இடையேயான இணைப்பு, பொதுப் போக்குவரத்து அமைப்புகள் போன்றவை பற்றி ஆய்வு செய்தது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் திடக் கழிவு மேலாண்மை திறன், கழிவுகளை அகற்றும் வழிமுறை ஆகியவற்றை ஆய்வு செய்தது. குடிநீர் மற்றும் குடிநீர் அல்லாத நீர் விநியோகம் குறித்து ஆய்வு செய்தது. ஐஐஎம்-இந்தூர் சுகாதாரத்தை குறிப்பாக திட, திரவக் கழிவு மேலாண்மை பற்றி மதிப்பீடு செய்தது. பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட அருகிலுள்ள ஆறு மாவட்டங்களில் சமூக-பொருளாதார தாக்கத்தை ஐஎஃப்சி-கேட்ஸ் அறக்கட்டளை கவனித்தது.
தூய்மையே நடுநாயகம்
மகா கும்பமேளாவின் முதல் நாளில், தை மாத பௌர்ணமி புனித நீராடல் விழாவிற்குப் பிறகு, சங்கம படித்துறை நெடுக சுத்தம் செய்ய பெரிய அளவிலான ஏற்பாடு இருந்தது “பொருத்தமான இடங்களில் குப்பையை எறிந்து, தூய்மையைப் பராமரிப்பதில் ஒத்துழைப்பீர்!” – பக்தர்களிடம் இந்த வேண்டுகோள் படித்துறைகளில் ஒலிபெருக்கி அமைப்பு மூலம் தொடர்ந்து விடுக்கப்பட்டது. பக்தர்களும் பரிவுடன் ஒத்துழைத்து குப்பையை குப்பைத் தொட்டிகளில் கொட்டினர்.
“பிப்ரவரி 14 அன்று 300 துப்புரவுப் பணியாளர்கள் ஒன்றாக பல்வேறு இடங்களில் கங்கையை சுத்தம் செய்தனர்; இது ஒரு பெரிய அளவிலான நதி சுத்தம் செய்யும் நிகழ்விற்கான உலகின் முதல் கின்னஸ் சாதனையாகும்” என்று மகா கும்பத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆகாங்க்ஷா ராணா கூறினார். (டிடி நியூஸ்).
சங்கமத்தில் குப்பை நீக்கும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, பக்தர்களால் வீசப்படும் பூக்கள், தேங்காய், துணி, பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் தினமும் 10-15 டன் வரை சேகரிக்கப்பட்டன என்று பிப்ரவரி 12 அன்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
“மகா கும்பமேளாவில் சுத்தீகரிப்புப் பணியில் தோள்கொடுக்கும் இஸ்ரோவும் பாபா அணுசக்தி மையமும்!” என்று ஜனவரி 8 ஆம் தேதியே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித் தலைப்பு தெரிவித்தது, மாசு இல்லாத கும்பமேளாவை நடத்துவதற்கான நன்கு விரிவான திட்டமிடல் நடப்பதை தேசம் உணர்ந்து கொண்டது. F