கேரளாவில், லவ்ஜிஹாத் மூலம் ஏமாற்றப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்துகொண்ட ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் சுமார் 32 அயிரம் பேர் கேரளாவில் இருந்து காணாமல் போனார்கள். இவர்கள், சிரியா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் பயங்கரவாதிகளாகவும் பாலியல் அடிமைகளாகவும் மாற்றப்பட்டனர். இந்த பெண்களின் வலியைச் சொல்லும் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. சுதிப்தோ சென் எழுதி இயக்கிய இப்படம், 32,000 பெண்கள்” காணாமல் போவதற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளின் உண்மை கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இதன் மூலம் கேரளாவின் முதுகெலும்பையே ஆட்டம் காணவைக்கும் உண்மைகள் எங்கே மக்கள் முன் வந்துவிடுமோ என்ற அச்சத்தில், இந்த திரைப்படத்தை திரையிட அரசு அனுமதி வழங்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்தத் துவங்கியுள்ளது.
காங்கிரசை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி டி சதீசன், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களின் கூற்றுக்களை நிராகரித்தார். மேலும் வரவிருக்கும் திரைப்படத்தின் நோக்கம் சர்வதேச அளவில் கேரள மாநிலத்தின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. கேரளாவில் 32,000 பெண்கள் முஸ்ளிம் மதத்திற்கு மாற்றப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் உறுப்பினர்களாக மாறியதாக பொய்யாகக் கூறும் படத்தை திரையிட அனுமதி வழங்கக் கூடாது. இது கருத்து சுதந்திரம் தொடர்பான பிரச்சினை அல்ல. சிறுபான்மையினர் மீது அவதூறுகளை ஏற்படுத்தி சமூகத்தில் பிளவை உருவாக்கும் சங்கபரிவார் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். வகுப்புவாதத்தின் விஷத்தை கக்குவதன் மூலம் கேரளாவை பிரிக்க முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம். மதப் போட்டியை வளர்க்கும் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாநிலம் அதன் பாரம்பரியத்தின்படி என்றும் ஒற்றுமையாக நிற்கும்” என்று கூறினார். இதேபோல ஆளும் இடதுசாரி அரசின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டி.ஒய்.எப்.ஐ) இந்த படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததுடன், அதன் டிரெய்லர் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறியுள்ளது. பாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பொய்களை பரப்பிய பி.பி.சியின் ஆவணப்படத்தை ஆதரித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு கட்சிகள், இப்போது உண்மை நிகழ்வான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை எதிர்ப்பதன் பின்னணி என்னவென்பது சற்றே சிந்திக்கத்தக்கது.