தேன்சிந்தும் மலர்சோலைகளைக் கொண்ட உத்தர கோசமங்கை தலத்தில் எழுந்தருளிய சிவனே! திருப்பெருந்துறை வாழ் தலைவனே! உன் பெயர் சொன்னால் பழம் போல் இனிப்பு, அமுதம் போல் சுவை; உன்னைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது கடினமே. உன்னை எளிதாகப் பிடித்து விடலாம் எனச் சொல்கிறார்களே தவிர, தேவர்களால் கூட அது இயலாது. உன்னுடைய வடிவத்தை இவன் தான் அவனோ? என்று அனுமானிக்கத் திணறும் தேவர்களுக்கே காட்சி தராத நீ, என் உண்மை வடிவம் இதுதான் என்று
கூறி, இதோ எங்கள் முன் நிற்கிறாய். எங்களை நீ என்ன செய்ய நினைக்கிறாயோ, அதைச் செய் என்று உன்னிடம் கேட்கிறோம். எம்பெருமானே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக
ஆர். கிருஷ்ணமூர்த்தி