திருப்பரங்குன்றம் எழுச்சியால் அம்பலமானது விடியல் உதறல்

தேசம் ஹிந்து தேசம். ஹிந்துவின் பிரச்சினை எதுவும் தேசிய பிரச்சினை. எனவே சென்ற வாரம் திருப்பரங்குன்றம் அறப்போராட்டம் மாநிலத்தில் நடுநாயகமானது சகஜம்.  நீதியை நிலைநாட்டக் கோரி வீதிக்கு வந்த ஹிந்துக்களை ஒடுக்க பிரிவினைவாத, நாத்திக, திமுக அரசு காவல்துறையை ஏவி விட்டதில் அறப்போராட்டம் விஸ்வரூபமெடுத்தது. திருப்பரங்குன்றத்தில் நடப்பது என்ன என்று அறிந்துகொள்வதில் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனமும் ஒருமுகப்பட்டது.  ஒடுக்கியே தீருவேன் என்று திமுக அரசு தர்பார் முண்டா தட்டியதுதான் கேலிக்கூத்து. உள்ளுற அதற்கு உதறல். தடுமாறும் நிர்வாகம், தலைவிரித்தாடும் ஊழல், தங்கு தடையின்றி அன்றாட வன்முறை என்று மாநில அரசின் ‘சாதனை ஆவணம்’ முழுதும் கரும்புள்ளிகளின் களஞ்சியம் ஆகிவிட்டது. பயத்தில் உதறல் ஏற்படாமல் என்ன செய்யும்? அறப்போராட்டம் பற்றி மாநில அமைச்சர்களின் உளறல்களே அந்த உதறலுக்கு அத்தாட்சி.

ருப்பரங்குன்றம் கந்தர் மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி பிப்ரவரி 4 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஹிந்து முன்னணி  ஹிந்துக்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது. மேலும்  மதுரை மாவட்ட நிர்வாகம் பிப்ரவரி 3, 4 ஆகிய 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. வெளியூர்க்காரர்கள் திரள்வதை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 4 ஆயிரம் போலீஸார் பாது
காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறுவதற்கு முன்பே துண்டு பிரசுரம் கொடுத்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள், தண்டோரா போட்டவர்கள் என பலர் மீது தடையை மீறியதாக பொய் வழக்கு போட்டது காவல்துறை.

மாநிலம் முழுவதும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தென் மாவட்டங்களில் 1,633 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தமிழகம் முழுவதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி, பாஜகவினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். திருப்பூரில் இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அவரது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் கையில் வேலுடன் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.

மேலும், ரயில், பேருந்து மார்க்கமாக ஹிந்துக்கள் வருவதை தடுக்கும் வகையில் மதுரை, திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கோயிலுக்குள் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், போலீஸாரின் பாதுகாப்பு வளையத்தையும் மீறி,  பக்தர்கள் போர்வையில் கோயிலுக்குள் சென்ற இந்து முன்னணி, பாஜகவினர்  ஒன்று
கூடி ‘திருப்பரங்குன்றம் மலை கந்தர் மலை கந்தனுக்கே சொந்தம், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டனர்.

மாவட்டம் முழுவதும் பதற்றம்:

அவ்வப்போது 100 பேர், 200 பேர் கூடியபடி கோயிலைப் பாதுகாக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்புவதும், அவர்களை போலீஸார் கைது செய்வதும் தொடர்ந்தது. இந்தப் போராட்டத்தால் மதுரை மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. எந்தப் பகுதியிலிருந்து, யார் வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியாமல் போலீஸார் திணறும் அளவுக்கு முருக பக்தர்கள் போராட்டத்தில் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று  தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

உயர் நீதிமன்றம் அதிரடி:

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பூர்ணிமா அமர்வு, பழங்காநத்தத்தில் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தர
விட்டனர். பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்
கணக்கானோர் தன்னெழுச்சியாக திரண்டு,  திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்கக் கோரி கோஷமெழுப்பினர். இதில் ஆர்.எஸ்.எஸ் தென்பாரத தலைவர் வன்னிராஜன்,  இந்து முன்னணி தென்பாரத அமைப்பாளர் பக்தன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,  இந்து முன்னணி மாநிலச் அமைப்புச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஒரு மணி நேரத்தில் குவிந்த கூட்டம்:

நீதிமன்றம் அனுமதி அளித்த ஒரு மணி நேரத்திற்குள் பல்லாயிரம் பேர் ஆர்ப்பாட்ட திடலில் குவிந்தனர். இது போலீஸார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் உணர்ச்சி
மிகுதியில் பலத்த எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். எனினும், நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு,  எவ்வித அசம்பாவிதம், விதிமீறலில் ஈடுபடாமல் கட்டுக்கோப்புடன் போராட்டத்தை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

யார் குற்றவாளி என்று தெரிகிறதா?

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படைவீடு. திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. பழநி ஆண்டவர் கோயில் மலை பாதை வழியாக காலம் காலமாக காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு வேல் எடுத்து செல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமானின் தலைக்கு மேல் ‘நாங்கள் ஆடு வெட்டுவோம்’ என்று ராஜபாளையம் மிலாம்பட்டி சையது அபுதாகீர் முயற்சித்தார். இதை போலீசார் தடுத்தனர்.

திருப்பரங்குன்றம் கந்தர் மலை மீது எவ்வித உயிர் பலி கொடுக்கும் வழக்கமும் நடைமுறையில் இல்லை என்று திருப்பரங்குன்றம், அதை சுற்றியுள்ள   கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  வலியுறுத்தியதால் கந்தர்மலையில் ஆடு,  கோழிகளை பலியிடுவதற்கு தடை உள்ளது.  ஆனால் தற்பொழுது
எஸ்.டி.பி.ஜ (SDPI – தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் அரசியல் கட்சி)  என்ற  கட்சியைச் சார்ந்தவர்களும் வெளியூரைச் சேர்ந்தவர்
களும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் திருச்சி மாவட்ட மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ அப்துல் சமீது,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனியும் அவரது கட்சி சார்ந்தவர்களும் கந்தர் மலைக்கு சென்றனர்.  காசி விசுவநாதர் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்து எஸ்.டி.பி.ஜ கட்சியினர் அசைவ பிரியாணி சாப்பிட்டனர். மேலும் கந்தர் மலை மீதுள்ள தர்காவும், பள்ளியும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு உட்பட்டது, ஆதலால் ஆடு, கோழிகளை வெட்டுவோம் என முழக்கமிட்டனர். கந்தர் மலையை சிக்கந்தர் மலை ஆக்குவோம் எனக் கூறினர்.

“திருப்பரங்குன்றம் கந்தர்மலை தொடர்பான வழக்கு 100 ஆண்டு பழமை
யானது. இதுபற்றி பல்வேறு நீதிமன்றங்களில் மலை முருகனுக்கு சொந்தமானது  தீர்ப்பு வந்துள்ளது. 1931ல் லண்டனிலுள்ள பிரிவிக்கவுன்சில் மூலம் இம்மலை முழுவதும் அறுபடை வீடுகளில் முதல்
படையான முருகனுக்கே சொந்த
மானது என தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. 1994-ல் தல
விருட்சமான கல்லத்தி மரத்தில் முஸ்லிம்கள் பிறைக் கொடி கட்டினர். இதை எதிர்த்து ஹிந்துகள் நீதிமன்றம் சென்றதால் 1931ல் இருந்த
படியே தொடரவேண்டும் என சொல்லப்பட்டது.

 

பிரிவி கவுன்சிலில் திருப்பரங்குன்ற வழக்கு

அன்றைய உச்சநீதிமன்றத்தின்

ஆணித்தரமான தீர்ப்பு

பிரிவி பிரிவி கவுன்சில்: பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இங்கிலாந்து மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் லண்டனில் உருவாக்கப்
பட்டதுதான் பிரிவி கவுன்சில். பாரதத்தைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில்தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாக இருந்தது. அதனால் பாரத நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வரும். அப்படித்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை வழக்கு முதலில் மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில்,  விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம்,  தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோயில் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் தரப்பில் தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும்.மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழமை நீதிமன்றம் 1923ம் ஆண்டு ஆகஸ்டில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசு தரப்பும், கோயில் தரப்பும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் கோவில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சரியானது என்பது தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு. திருப்பரங்குன்றம் கோயிலின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பிரிவி கவுன்சில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைய பல்வேறு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.

ஆதாரம் ஒன்று

அதில் இந்த கோயில் 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையில், மலை முழுவதையும் சிவலிங்கமாக பக்தர்கள் வழிபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாடு மதுரையில் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பழைய ஆவணங்கள் பலவற்றில் இந்த மலையை சுவாமிமலை என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம் இரண்டு

கோயில் நிர்வாகத்தினர் நூறாண்டுகளுக்கு மேலாக இந்த மலையை சொந்தம் கொண்டாடும் வகையில், பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேரோட்டம் நடக்கும் கிரி வீதியை அகலப்படுத்த ஒரு வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்கள் 1835ம் ஆண்டு முதல் உள்ளன. 1861ம் ஆண்டு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கான புகார் ஒன்று மதுரை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டது. அப்போது, ‘ மலை முழுவதும் கோயிலுக்கு சொந்தமானது என்பதால் மரங்கள் தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதையும், அதை அவ்வப்போது பராமரித்து சரி செய்வதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பல இடங்களில் சிறு பாலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் செய்துள்ளனர்.

ஆதாரம் மூன்று

இந்த ஆதாரங்கள் அனைத்தும், கோயில் நிர்வாகத்தின் உரிமை மற்றும் பொறுப்பில் மலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்று கருதியே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று பிரிவி கவுன்சில் சுட்டிக்
காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தான், மதுரை கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள லண்டன் பிரிவி கவுன்சில், கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்று
வதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்
துள்ளது.

கோயில் அமைந்துள்ள மலை, எல்லா காலத்திலும் கோயில் நிர்வாகத்தினர் வசமே இருந்துள்ளது என்பதும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிவி கவுன்சில் தெரிவித்
துள்ளது. புறம்போக்கு நிலம் என்பது பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் இந்த வழக்கை பொறுத்த வரை, குறிப்பிட்ட அந்த நிலம் முழுவதும் கோயிலுக்கு சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.           F

.