யார் சோன்னார்களோ தெரியவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அனைத்துக் கட்சியினரும் தள்ளப்பட்டனர். போராடினர். எதிர்க்கட்சி பந்த் நடத்தியது. மாநில அரசு மத்திய அரசைக் கண்டித்தது. ஒரு படி மேலே போ நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்தது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு குறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அதை அமலாக்க செயல் திட்டம் (scheme) ஒன்றை ஆறு வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டது.
‘செயல் திட்டம்’ என்ற ஒற்றைச் சோல் இத்தனை விளைவுகளை ஏற்படுத்தும் என வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளோ, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களோ, வாதி பிரதிவாதிகளோ நினைத்திருக்க வாப்பில்லை.
முதல்வர் நாற்காலி மீதான தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள, நெடு நாள் பகையான மற்றொரு திராவிடக் கட்சியினைப் பழி தீர்த்துக் கொள்ள தமிழக எதிர்க்கட்சியின் செயல் தலைவர் தக்க தருணம் தேடிக் காத்திருந்தார்.
அந்நேரத்தில் தான் காவிரி நதி நீர் பங்கீட்டுத் தீர்ப்பு வந்தது. சட்டையைக் கிழித்தது போல சட்டத்தைக் கிழிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட செயல் தலைவர் தீர்ப்பைத் திரிக்கலாம் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்.
அதன் படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தெளிவுறக் குறிப்பிடப்பட்டிருந்த ‘செயல் திட்டம்’ என்பதற்கு அனர்த்தம் கற்பித்து, மக்களைக் குழப்பி, ஆதாயம் அடைவதற்கு ‘செயல்’ திட்டம் ஒன்றைத் தீட்டினார். ஊடகங்கள் ஒத்து ஊதின.
செயல் திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியத்தையே குறிக்கும் என்ற பொ எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் பரப்புரை செயப்பட்டது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு என்பது கூட தீர்வை எட்டக் கூடிய செயல் வடிவம் என்பதை அவர்கள் ஏற்க விரும்பவில்லை.
நான்கு மாநில முதல்வர்களும் கொண்டுள்ள வேறுபட்ட நிலைப்பாடுகள், தீர்ப்பை அமலாக்க மத்திய அரசு எடுத்து வரும் ஒருங்கிணைப்பு முயற்சிகள் எல்லாம் தெரிந்தும் கூட மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் முரண்படத் தொடங்கினர்.
பிரச்சினை என்னவோ மாநிலங்களுக்கு இடையில் தான். ஆனால் தமிழக எதிர்க்கட்சித் தலைவருக்குக் கொடி பிடிக்கிறது ஒரு இளம் தலைமுறை. ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரள்கின்றனர் சில பிரிவினர். எல்லா விதத்திலும் தான் மட்டுமே குறி வைக்கப்படுவதை அறிந்த ஆளுங்கட்சி வேறு வழி இல்லாமல் எதிர்க்கட்சி விரித்த வலையில் தானே சென்று சிக்கிக் கொண்டது பரிதாபம்.
மத்திய அரசுக்கு எதிரான துஷ்பிரச்சாரம் தொடர்ந்து வரும் வேளையில் காவிரி மேலாண்மை வாரியப் பிரச்சனையில் மாநில அரசின் பலவீனத்தைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர் தேச விரோதிகள்.
அடுத்தடுத்து பந்த் அறிவித்து அப்பாவிப் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கேலிக்குரியதாக்கினார்கள். சில இடங்களில் வணிகமும், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன. பொதுச் சோத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. ‘திராவிட பந்த்’ வெற்றி என அவர்களது ஊடகங்கள் செதி வாசித்தன.
மேலாண்மை வாரியம் அமைவதை எதிர்க்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கத் துணிவில்லாத தமிழக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் காவிரிப் பிரச்சனைக்கு வழி கோலிய திமு கழகத்திற்குத் துணை போனது, இது அப்பட்டமான அரசியல் என்பதை உணர்த்துகிறது.
நீர் பொதுவானது. அணைகள் அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. உத்தரவிடுவது சுலபமான விஷயம். செயலாக்குவது சிக்கலான விஷயம்.
நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரச்சனை. நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுமன்றி நிர்வாக ரீதியாகவும், நேர்மையாகவும் நீண்ட கால, நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்கிறது மத்திய அரசு. டூ
ஊடக உத்தமர்கள்
காட்சி, அச்சு ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பொ புரட்டுகளைத் தடுக்க, தண்டிக்க ஒரு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மத்திய செதி ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்த பொழுது ஊடகங்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. சட்ட திருத்தம் இப்போதைக்கு திரும்பப் பெறப்பட்டது.
தமிழக பாஜக முயற்சி
நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்த தமிழக பாஜக குழுவினர் மேலாண்மை வாரியம் அமைக்கவும், அதே நேரத்தில் மாற்றுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தினர். அந்த நேரத்தில் குழுவினரின் கோரிக்கையை மிகவும் அக்கறையோடு கேட்டுக் கொண்ட நிதின் கட்கரி ஆக்கப்பூர்வமான தீர்வுகள் பலவற்றையும் விவரித்திருக்கிறார். நதி நீர் இணைப்பு, கடல் நீர் சுத்திகரிப்பு போன்ற அத்திட்டங்கள் விரைவில் நம் நீராதாரத்திற்கு வலு சேர்க்கக் கூடும்.
ராகுல் ராவடி
திமு கழகத்தின் செயல் தலைவர் ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதைத் திரித்தது போலவே காங்கிரஸ் கட்சியின் ‘செயல் தலைவர்’ ராகுல் கூட வன்கொடுமைச் சட்டம் நீர்த்துப் போவிட்டது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் திரித்து பொ பரப்பினார். ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தின. சட்டத்திலும், சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் தண்டனையிலும் எள்ளளவும் மாற்றமில்லை என விளக்கம் வெளியிட வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டது.