குருவாயூர் கோயிலை அழிக்க வருவதை முன்னதாக தெரிந்து கொண்ட ஹிந்துக்கள் குருவாயூரப்பனை தூக்கிக்கொண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அம்பலப்புழாவிற்கு கொண்டு சென்று மறைத்து வைத்தார்கள்.
வீரர் கூட்டமாக இருந்த நாயர் சமூகத்தையே வேரறுக்க முனைந்தார். போரிடக்கூடிய இளம் நாயர் தலையை வெட்டி கொண்டு வந்தால் முந்நூறு ரூபாய் (அந்த காலத்திலேயே), வயதானவராக இருந்தால் இருநூறு, பெண்கள் குழந்தைகள் தலைக்கு நூறு ரூபாய் பரிசனெ அறிவித்து வெட்டிச் சாய்த்தார். பிடிபட்ட நாயர் பெண்களை பல பகுதியில் உள்ள மன்னர்களுக்கும் தலைவர்களுக்கும் பரிசாக அனுப்பி ஆதரவை தேடிக் கொண்டார். சரணடைந்த நாயர்களை விருத்த சேதம் செய்து முஸ்லீமாக மாற்றி தன் படையில் சேர்த்துக் கொண்டார்.
ஹைதர் அலி கொடூரமானவராக இருந்த போதிலும் தன் மதத்தைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ராஜ்ஜியத்தில் தீவிர இஸ்லாமியராக இருப்பது அரசியல் ரீதியாக சரியல்ல என்று கருதினார். தான் வென்ற பகுதியில் உள்ள ஹிந்து தலைவர்களை கொல்லாமல் தன் தலைமையை ஏற்றுக்
கொண்டு, கப்பம் வசூலித்துக் கொண்டு, ஆட்சி செய்ய அனுமதித்தார்.
திப்பு சுல்தான் அதற்கு நேர் மாறாக மைசூரை இஸ்லாமிய மயமாக்கினார். தனது ஆட்சியை சர்க்கார் -–இ -– குதாதாத் (அல்லா தந்த அரசு) என்று அறிவித்தார். அரசு மொழியாக இருந்த கன்னடத்தையும் மராட்டியையும் நீக்கி விட்டு பாரசீக மொழியை ஆட்சி மொழியாக்கினார்.
ஊர்களுக்கும் நகரங்களுக்கும் முன்பு இருந்த பெயரை மாற்றி இஸ்லாமிய பெயர்களை சூட்டினார். தன் அந்தபுரத்தில் காம சுகத்திற்காக அடைத்து வைத்திருந்த ஹிந்து பெண்களை தாழ்வாகவும் முஸ்லிமாக மதம் மாறிய பெண்களை ஹிந்து பெண்களை விட உயர்வாகவும் நடத்தினார். தீபாவளி தினத்தில் ஹிந்துக்களை கொல்வதையும் சாம்பல் திருநாளின் போது கிறிஸ்தவர்களை கொல்வதையும் அவர் திட்டமிட்டே நடத்தினார். எல்லா வகையிலும் அவர் மதவெறி கொண்டவ
ராகவே இருந்தார்.
இதையெல்லாம் பிரிட்டிஷார் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலேயர்களின் ஆவணத்தை நம்ப மாட்டோம் என்பவர்களுக்கு பாரசீக மொழி
யில் உள்ள ஆவணங்களை காட்டுகிறார். அதையும் சந்தேகிப்பவர்கள் திப்பு கைப்பட எழுதியுள்ள நாட்குறிப்பேட்டையும் கடிதங்
களையும் பார்க்க வேண்டும் என்கிறார் வரலாற்றாளர் விக்ரம் சம்பத்.
சங்கரமட விஷயம்
திப்பு சுல்தான் மதரீதியாக வேறுபாடுகளை காட்டவில்லை. மாறாக சிருங்கேரி சங்கர மடத்திற்கு பல உதவிகளை செய்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டு சங்கராச்சாரியார் ஆசி கூறி கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு பல மானியங்களை அளித்துள்ளார். அதற்கு சான்றுகள் உள்ளது என்று இடதுசாரிகளும் காங்கிரஸ் காரர்களும் திப்புவை மதவெறியற்ற, நடுநிலையான, அனைவரையும் அரவணைத்துச் சென்ற ஆட்சியாளர் என்கிறார்கள். அது உண்மை தானே என்று தோன்றுகிறது.
மராட்டியர்கள் மைசூர் மீது படையெடுத்து வந்தார்கள். அரசு படைகள் மட்டுமல்ல கூலிப்
படைகளும் அவர்களுடன் வந்தார்கள். அவர்கள் பிண்டாரிகள் என்று அழைக்கப்
பட்டார்கள். படையெடுத்து வந்தவர்கள் சிங்கேரி மடத்துக்கு சொந்தமான சொத்துக்
களை கொள்ளையிட்டனர். கட்டடங்களை இடித்து தள்ளினர். இதை கேள்விப்
பட்ட பேஷ்வா மிகவும் வருத்தப்பட்டார். தவறுகளுக்கு மன்னிப்பு கோருவதாகவும் இழப்பீடு தருவதாகவும் மடத்தை மீண்டும் கட்டித் தருவதாகவும் கூறினார்.
இந்நிலையில் மராட்டிய பேஷ்வாவுக்கு எதிரான திப்பு சுல்தான் ஹிந்து மன்னரும் (பேஷ்வா) ஹிந்து மடாதிபதியும் இணைவதை விரும்பவில்லை. தானே மடத்தை கட்டி தருவதாகவும் இழப்பீடுகளை தருவதாகவும் சங்கரமடம் பேஷ்மாவிடமிருந்து இழப்பீடு பெறுவதை தான் விரும்பவில்லை என்றும் திப்புசுல்தான் சங்கராச்சாரியாருக்கு கடிதம் எழுதினார். சிருங்கேரி மடமும் அதை ஏற்றுக் கொள்வதாக ஆசி கூறியது. ஹைதர் அலியும் அவருக்கு பிறகு சுல்தானான திப்புவும் பலமுறை சங்கராச்சாரியருக்கு கடிதம் எழுதி உள்ளார்கள் என்ற போதிலும் இவை அரசியல் யுக்தியாக தான் கருதப்பட்டது.
ரங்கநாதர் கோயில் விவகாரம்
அதேபோல் ரங்கநாதர் விஷயம். தொடர்ந்து போர், நிலையற்ற அரசியல் சூழ்நிலை, குழப்பங்கள், சதிகள் என வாழ்ந்த நிலையில் திப்பு சுல்தானுக்கு பல மூட நம்பிக்கைகள் ஏற்பட்டன. இது இயல்பு தான். அவ்வாறான மூடநம்பிக்கைகள் ஜோதிடர்கள் பிடியில் திப்புவை ஆழ்த்தியது. ஜோதிடர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொண்டான். நின்ற நிலையிலும் படுத்த நிலையிலும் உள்ள சுவாமி சிலைகளை உடைப்பது தோல்வியையும் பாவத்தையும் கொண்டுவரும் என்று சொல்லி உள்ளார்கள். எனவே அவர் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள புகழ்பெற்ற பெரிய ரங்கநாதர் ஆலயத்தை தாக்கி தகர்க்கவில்லை.
இதை தெரிந்து கொண்ட பிராமணர்கள் பல கோயில்களில் சம்பந்தமே இல்லாமல் சுவாமி பெயருடன் ரங்கா என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டு தங்கள் கோயில்களையும் சுவாமிகளையும் காத்துக் கொண்டார்கள். எடுத்துக்காட்டாக கல்யாண ரங்கா, மகாடி ரங்கா, குண்டாட ரங்கா என்று தெற்கு கர்நாடக பகுதியில் உள்ள கோயில்களை காட்டலாம். பல கோயில்கள் ரங்கநாதன் கோவில்களே அல்ல. கோயில்களில் வேகவேகமாக ரங்கநாதர் சன்னதியை நிறுவி விட்டார்கள். உண்மை பெயருடன் ரங்காவை சேர்த்துக் கொண்டார்கள். இதற்கு முன்பு இல்லாதபடி இப்படி புதுமையான முறையை கையாண்டு ஹிந்துக்கள் தங்கள் கோயில்களையும் சாமி விக்கிரகங்களையும் காப்பாற்றிக் கொண்டார்கள்.
அது மட்டுமல்ல பல கோவில்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மானியங்கள் ஹைதர் அலி கால ஆட்சியின் போது வழங்கப்பட்டவை. திப்புவின் ஆட்சியில் அவை தொடரப்பட்டது. திப்பு சுல்தான் ஆன பிறகு மத நல்லிணக்கத்
திற்காக, சமரசத்திற்காக கொடுத்தது என்று ஏதுமில்லை
முன்னோடிகள் மூடர்களா ?
இதெல்லாம் உண்மை என்றால், இதற்கு முன்பிருந்த வரலாற்றாளர்கள் கிறிஸ்தவர்கள், ஹிந்துக்கள் மீது திப்புசுல்தான் நடத்திய அட்டூழியங்களை அரசியல் காரணத்திற்காக முடி மறைத்தார்களா? என்ற கேள்வியை சம்பத்திடம் கேட்டார் ஒரு செய்தியாளர்.
ஆமாம். அரசியல் காரணத்திற்காக மறைத்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு தேச நிர்மாண பணியில் வரலாறு ஒரு கருவியாக கருதப்பட்டது. சில கொடூரமான உண்மைகளை சொல்லாமல் இருப்பது நல்லது என்று கருதினார்கள். மனித இன வரலாற்றிலேயே மிகவும் ரத்த கறை படிந்த பகுதி பாரதத்தின் மீது இஸ்லாமிய படையெடுப்பு / ஆதிக்கம் நிகழ்ந்த காலம் தான் என்று உலக புகழ்பெற்ற வரலாற்றாளரான வில் டூரண்ட் எழுதியுள்ளார்.
சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சியாளர்கள் இந்த கொடூரங்களை சொல்வது சமூக ஒற்றுமைக்கும் தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் என்று தவறாக கருதினர். அப்படி நினைத்ததன் மூலம் இன்றுள்ள முஸ்லிம்களை கஜினி, கோரி, தைமூர், ஒளரங்கசீப், திப்பு போன்ற கொடூரமான இன்னும் பலருடன் இணைத்து விட்டனர். எனவே முஸ்லிம் சமூகத்தை வெள்ளை அடித்து தூயதாக காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இன்றுள்ள முஸ்லிம்கள் அன்றிருந்த காட்டுமிராண்டிகளின் செயல்களுக்கு பொறுப்பாக்க முடியாது என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். கடந்த கால நிகழ்வுகள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மாற்றி விட முடியாது. அன்று திப்பு செய்த குற்றங்களை இன்றுள்ள மனித உரிமைகள் கண்ணோட்டத்தில் எடை போடக்கூடாது. அவர் வாழ்ந்த காலத்தில் அப்படியான சூழல் நிலவியது.
என்னுடைய நூல்கள் எதிலும் இன்றைய கண்ணோட்டங்களையும் வரையறைகளையும் கொண்டு வரலாற்று ஆளுமைகளை எடை போட்டதில்லை. வன்முறை என்பது ஆட்சியுடனும் அதிகாரத்துடனும் இணைந்தே இருக்கின்ற விஷயம். சிலர், அவர்கள் காலத்தில் இருந்தவர்களை விடவும் கொடூரமானவர்
களாக இருந்துள்ளார்கள். மத சிந்தனையுடன் குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து வன்முறையை நிகழ்த்தியுள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.
அவற்றை பேசுவதால் இப்பொழுதுள்ள சமுதாயத்தில் கொத்தளிப்பு ஏற்படும் என்பது இப்போது பாரதத்தில் உள்ள முஸ்லிம்களை அந்த காலத்துடன் பிணைப்பதாகும். இது முற்றிலும் நியாயமற்றது. இன்று உள்ளவர்கள் அன்றைய கொடுமைகளுக்கு எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள், என்று சம்பத் பதிலளித்துள்ளார்.
விக்ரம் சம்பத் எந்த பக்கம் : வலதா இடதா?
வலதுசாரி பாஜக ஆட்சியில் ஹிந்துத்துவ உள்நோக்கோடு திப்பு சுல்தானை பற்றி விக்ரம் சம்பத் எழுதியுள்ளார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு…
விக்ரம் சம்பத் இதுவரை 10 புத்தகங்களை எழுதி உள்ளார். 17 ஆண்டுகளுக்கு மேலாக இந்த துறையில் களமாடி வருகிறார். அவர் மீது எண்ணற்ற தாக்குதல்கள் நடந்துள்ளன. பல அவதூறுகள் சுமத்தப்பட்டன. வாழ்த்துக்
களையும் வசைகளையும் தாங்கிக் கொண்டே தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
தான் எந்த அரசியல் கட்சியையோ குழுவையோ சார்ந்தவர் இல்லை என்று கூறும் சம்பத் தன்னை ‘உண்மையின் பக்கம் நிற்பவன். பாரதத்தின் பக்கம் நிற்பவன்’ என்று வேண்டுமானால் அடையாளப் படுத்த
லாம் என்கிறார். பாரத வரலாறு மற்றும் கலாச்சார ஆய்வு அமைப்பை நிறுவி அதன்மூலம் உள்நோக்கம் இல்லாமல் உண்மையையும் சான்றுகளையும் கொண்டு ஆரோக்கியமான ஆய்வு
களை மேற்கொள்ள பலரை தயார்படுத்தி வருகிறார்.
‘வலதுசாரி’ வரலாற்றாளர்கள் என்று சொல்லிக்கொண்டு மாற்று வரலாற்றை யாராவது எழுதினால் அதில் என்ன தவறு ? பல பத்தாண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சியின் பொலீட்பிரோவில் (உயர்நிலை அதிகார குழு) இருப்பவர்கள் மார்க்ஸிய வரலாற்றாளர்கள் என்று தங்களை கூறிக் கொண்டு வரலாற்றை அவர்கள் விருப்பம் போல் எழுதும் போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று தங்கள் பக்க சாய்வுகளை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர்கள் வரலாற்றை எழுதும்போது, இப்போது வேறொரு புதிய குழுவினர் வந்து இதுவரை இருந்ததற்கு மாறான வரலாற்றை அறிவார்ந்த நிலையில் நிறுவினால் அதில் தவறென்ன ? வரலாற்றின் வாயில் காப்போராக இதுவரை இருந்தவர்கள் பதறுவது ஏன்? என்று சம்பத் வினவுகிறார். இது நியாயமான கேள்விதான்.
நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்,
தமிழில் : திருநின்றவூர் ரவிக்குமார்
முற்றும்