அமெரிக்க செனட் சபை, டி.பி.எஸ்.ஏ எனப்படும், ‘திபெத்திய கொள்கை, ஆதரவு சட்டம் 2020’ஐ நிறைவேற்றியது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இதில், தலாய் லாமா, அடுத்த தலைவர் குறித்த விஷயங்கள் திபெத்திற்கு மட்டுமே சம்பந்தப்பட்டது. இதில் சீனா தலையிட்டால் பொருளாதார தடை உள்ளிட்ட கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது திபெத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளும் இந்தச் சட்டத்தில் உள்ளன. இந்த கொள்கைகள் திபெத்தை அமெரிக்கா ஒரு தனி தேசமாக கருதுவதையே பிரதிபளிக்கிறது. திபெத்தை ஆக்கிரமிக்கும் சீனாவுக்கு இது பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.