ராஜஸ்தானில் உதய்பூரைச் சேர்ந்த தையல்காரர் கன்னையா லாலின் கொடூரமான கொலை தொடர்பான விசாரணைகள், அவரை கொலை செய்த முஸ்லிம் பயங்கரவாதிகளின் பாகிஸ்தானின் கராச்சியை தளமாகக் கொண்ட தாவத் இ இஸ்லாமி அமைப்புடனான சர்வதேச தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளன. உலகளவில் ஷரியா சட்டத்தை ஆதரிக்கும் தவாத் இ இஸ்லாமி அமைப்பு, பாகிஸ்தானில் பெரும் ஆதரவாளர்களைக் கொண்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள், அடிக்கடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். கௌஸ் முகமது, 2014ல் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளதும் இரண்டாவது கொலையாளி ரியாஸ் அட்டாரி ராஜஸ்தானின் பா.ஜ.க சிறுபான்மை பிரிவுக்குள் ஊடுருவ முயன்றதும் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் தொண்டர்களுடன் நெருங்கி பழக முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பிலிபிட்டில் உள்ள அனைத்து தாவத் இ இஸ்லாமி பள்ளிகளையும் மூடியுள்ளது. மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த இஸ்லாமிய அமைப்பிற்கு நிதி வசூலிக்கும் அனைவருக்கும் எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளது.