சமீபத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சியாச்சினில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், ‘லான்ஸ் நாயக்’ சுதீஷின் நான்கு மாத குழந்தைக்கு, அவரது தந்தையின் சடலத்தை, குடும்பத்தினர் காட்டும் புகைப்படம், பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருந்ததை பார்க்க நேர்ந்தது. அந்த பிஞ்சு முகத்தை, ஒருமுறை கூட பார்க்காமலேயே, சுதீஷ் கண் மூடியது பெரும் சோகம்.
அதே பத்திரிகையில், நேரு பல்கலையில், ‘எது தேசபக்தி’ என்ற பெயரில், இருதரப்புக்கு இடையே நடந்து வரும் மோதல்களையும் படித்தேன். சட்டசபையில் நடக்கும் மோதல்கள், மதுக்கடை பார்களில் நடக்கும் ஊழல் போன்ற இன்னபிற செதிகளையும் படிக்க நேர்ந்த போது, அவமானமும் மேலிட்டது.
எல்லையில், நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள், எதிரிகளின் தாக்குதலில் மடியும் போது, நாம் சுதந்திரம் பற்றியும் தேசபக்தி பற்றி விவாதம் நடத்துவது எவ்வளவு மடத்தனமானது! அதுவும், உறை பனியில் சிக்கி உயிர் துறக்கும் பாதுகாப்பு படையினரை பரிகாசம் செதபடி, சோகுசு அறையில் அமர்ந்து, தேசபக்தி பற்றி பேசுவது எவ்வளவு போலித்தனமானது!
குளிர் அடிக்கிறது என்று உணர்ந்ததுமே, இழுத்துப் போர்த்திக் கொள்கிறோம்; வெதுவெதுப்பான நீரில் பல் துலக்குகிறோம்; ஆவி பறக்கும் வெந்நீரில் குளிக்கிறோம். இப்படி எல்லா சுகங்களையும் அனுபவித்தபடி, பல்கலைகளுக்கும், அலுவலகங்களுக்கும் சென்று, அங்கு தேசபக்தி பற்றி கேள்வி எழுப்பவும் பாதுகாப்பு படையினரை விமர்சிக்கவும் செகிறோம்.
ராணுவ வீரர்கள், தங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை அபாயகரமான இடங்களில் கழித்தபடி, குடும்பத்தினரையும் நினைத்தபடி, வேதனையுடன் காலத்தை கழித்து வருகின்றனர். தன் முகத்தை கூட பார்க்காமல், உயிரை விட்ட முப்படையினர் ஏராளம்.
நாம் வாழும் மண், பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, செத்த பிறகு இடம் இவை எல்லாமே நம் தாநாடு தான். வயதான தா, தகப்பனை பிள்ளைகள் எப்படி கைவிட முடியாதோ, அதுபோல, தா நாடான இந்தியாவை நாம் தவிக்கவிட முடியாது.
நேரு பல்கலையில், தற்போது நடந்துவரும் கருத்து மோதலில், மூக்கை நுழைக்க விருப்பம் இல்லை. ஆனால், சில மாணவர்களின் மனநிலையை பார்த்தால் மிக வருத்தமாக உள்ளது.
தேசம் என்றால் என்ன; தேசபக்தி என்றால் என்ன; நம் கலாசாரத்தின் சிறப்பு ஆகியவை பற்றி, அவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.
(கட்டுரையாளர் பாரத ராணுவத்தின் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பட்டம் பெற்ற ஒரே திரைப்பட நடிகர்)