ஆச்சார்ய வினோபா பாவே பங்களிப்பு குறித்த இணைய வழிப் பயிலரங்கில் பேசிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூரியதாவது. வினோபா மற்றும் காந்தி ஆகியோர் கொண்டிருந்த லட்சிய நோக்கமான சஷாக்த் பாரதம், ஸ்வாபிமானி பாரதம், தற்சார்பு பாரதம் என்ற இலக்குகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தியாவின் தற்சார்பு என்ற திட்டம் தேசியவாதம் மற்றும் தனித்து செயல்படுதல் என்பதாக இல்லாமல், உலக அளவிலான நன்மைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்வதாகவும் இருக்கும் என்று விளக்கினார்.
காந்தியடிகளின் எண்ணங்களை அப்படியே பின்பற்றிய சீடராக வினோபா பாவே இருந்தார். அக்கறை காட்டுதல், தியாகம் மற்றும் சேவை என்ற விஷயங்கள் தான் இந்தியன் என்பதன் முக்கியமான அம்சங்களாக இருக்கின்றன என்றார். ஒவ்வொரு குடிமக்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில்முனைவு திறமையைக் கண்டறிந்து, உள்ளூர் வளங்களைக் கொண்டு உற்பத்திகள் செய்து தற்சார்பு நிலையை எட்டவும், மனிதகுலத்துக்கு சேவை ஆற்றவும் வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.