தற்கொலைக்கு காரணமான தி.மு.கவினர்

தமிழகத்தில் தி.மு.க அரசில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினரும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த மாதம் நன்னிலம் அருகே கமுகக்குடியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரசு அதிகாரி லஞ்சம் கேட்டு தொல்லை செய்ததாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் இந்த நிலையில், அதேபோல மற்றொரு சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டிய கூலித் தொழிலாளியான கார்த்திகேயன், தி.முக.வின் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் செந்தில்குமாருக்கு லஞ்சம் தர மறுத்ததால், அவரை வார்த்தைகளால் பேசியுள்ளார் செந்தில் குமார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கார்த்திகேயனின் இறப்புக்கு காரணம் பள்ளிவர்த்தி ஊராட்சி மன்றத் தலைவர் மாலாவின் கணவர் செந்தில்குமார் தான் என்றும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கார்த்திகேயனின் மனைவி ராதா மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.