தமிழக வாக்காளர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் என்ன?; பரதன் பதில்கள்

காசி  யாத்திரை  செல்வதன்  நோக்கம்  என்ன?

– எஸ். சுதா, மாணிக்கம்பாளையம்

ஹிந்துக்களுக்கு புனிதமான ஜோதிர்லிங்கம் 12-ல் காசி முதன்மையானது. ஹிந்துக்கள், வாழ்க்கையில் ஒரு முறையாவது காசி சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசிக்க வேஎண்டும் என்பது ஐதீகம். ‘கங்கையில் குளித்தால் பாவம் போகும்’, ‘காசியில் இறந்தால் முக்தி’ என்பதெல்லாம் காலம் காலமாக இருந்துவரும் நமது நம்பிக்கை. (அயோத்தியா, மதுரா, உள்ளிட்ட ஏழு மோட்ச தலங்களில் காசியும் ஒன்று.)

 

ஆசி  பெறும்போது  மனைவி  கணவரின்  எந்தப்  பக்கம்  நிற்க  வேண்டும்?

– பழனிமுருகன், குருரெட்டியூர்

கடவுளை வழிபடும்போதும் பெரியவர்களிடம் ஆசிபெறும்போதும் கணவரின் வலது புறமே மனைவி நிற்க வேண்டும்.

 

கீதை படிப்பதை விட கால்பந்து விளையாட்டின் மூலம் சொர்க்கத்தை அடைய முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதன் கருத்து என்ன?voter

– அஜித் எஸ். குமார், நேமத்தான்பட்டி

ஒரு மாணவன் சுவாமி விவேகானந்தரிடம் கீதையின் ஒரு சுலோகத்திற்கு பொருள் கேட்கிறார். அப்பொழுது சுவாமிஜி ஒரு வீரன் மற்றொரு வீரனுக்குச் சொன்னது கீதை. அதை ஒரு பலவானாலேயே புரிந்து கொள்ள முடியும். எனவே, முதலில் நீ நல்லா விளையாடி உடலை பலப்படுத்திக்கொண்டு பிறகு கீதை படி. புரியும்” என்றார்.

 

* ஒருவன்  விரும்பி  மதம்  மாறுவது  தவறு  இல்லை  என்கிறார்களே?

– பி. மகாலிங்கம், திருக்கடையூர்

அப்படியெல்லாம் யாரும் விரும்பி மதம் மாறுகிறவர்கள் இல்லை. ஆசைகாட்டி, அச்சுறுத்தி, ஏமாற்றி மதம் மாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை.

 

பரதனாரே…

– ஜான்ஸன் குமார், தருமபுரி

ஏப்ரல் 1ம் தேதி (என்ன விசேஷம்…) நாம் ஏமாந்தால் அது தனிப்பட்ட முறையில் நமக்கு மட்டுமே ஒரு நாளைக்கான பாதிப்பு. மே 16-ம் தேதி (என்ன விசேஷம்) ஏமாந்தால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே ஐந்து ஆண்டுகளுக்கு பாதிப்பாகி விடும். ஜாக்கிரதை!

 

அதிமுகவிற்கு  மாற்றாக  திமுக  என்பது  சரிதானா?

– ஆர். முரளிதரன், நெல்லூர்

அதிமுக ஊழல் என்றால் திமுக மட்டும் யோக்கியமா? இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!

 

* எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினாலும் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லமாட்டேன் என்கிறாரே முஸ்லிம் தலைவர் ஓவைஸி?

– திருமதி. ரேவதி, மதுரை

‘பாரத் மாதாகீ ஜே’ (எனது பாரத நாடு வாழ்க) என்று சொல்ல விருப்பமில்லாதவர்கள் பாகிஸ்தான் போக வேண்டியதுதானே.

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.