தமிழக மீனவர்களுக்கு நல்ல வழிகாட்டுங்கள், பிரச்சினையை திசைதிருப்பாதீர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 10 வருடத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 736 முறை தாக்கப்பட்டும்611  விசை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் 3,665 பேர்  கைது செய்யப்பட்டும் உள்ளனர் என்றார். ஏதோ மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் இப்படி எல்லாம் நடப்பது போன்று பேசியிருந்தார்.

இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்திமுகவுடனான கூட்டணி ஆட்சியில் 1983 முதல் 2013 வரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும்,   முந்தைய வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியிலோ, மோடியின் தலைமையிலான தற்போதைய ஆட்சியிலோ ஒரு சில நிகழ்வுகளைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதையும் அவர் கூறவில்லை

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மீனவர்களின் மரணங்கலே இவ்வளவு என்றால், கைதுகளும்,படகுகள் பறிமுதல்களும், தாக்குதல்களும்,  காயங்களும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நாம் யூகித்துக் கொள்ளலாம்.

எப்போ கச்சத்தீவை காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இலங்கையிடம் தாரை வார்த்தார்களோ அப்போதேமீனவர்களுக்கு பிரச்சினை வந்துவிட்டது.  இதற்குதிமுக எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆமோதித்தது. அன்று முதல் மிகவும் சிக்கல் நிறைந்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு பகுதியாகத்தான் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டம் 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்டது.  இதற்காக 1,500 கோடியும் ஒதுக்கப்பட்டது. மீனவர்கள் ஏற்கெனவே தாங்கள் வைத்திருக்கும் படகுகளை ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைப்பதற்கும்,அல்லது புதிய நவீன படகுகளை வாங்குவதற்கும் இத்திட்டம் வழிவகுக்கிறது.

அதாவது புதிய படகு  விலை 80 லட்சம் என்றால் அதில் 50 சதவீதம் மத்திய அரசும்,   20 சதவீதம் மாநில அரசும் 20 சதவீதம் வங்கிகள் கடனாகவும் தருகிறது. மீதி பத்து சதவீதம் அதாவது 8 லட்சம் மட்டுமே மீனவர்களுடைய முதலீடாகும்.

ஆனால் இத்திட்டம் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியில் சில 100 கோடி கூட செலவழிக்கப் படவில்லை. இப்படி குறை கூறுவதை விடுத்து மீனவர்களுக்கு நல்வழி காட்டலாம். ஆழ்கடலில் 1.75 லட்சம் டன் அளவிலான மீன்வளம் இருப்பதாகவும் வருடத்துக்கு 23 ஆயிரம் டன் அளவில் மட்டுமே பிடிக்கப்படுவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.