திராவிட மாடல் ஆட்சியில் காவல் துறையினரின் செயல்பாடுகள் கேலிக்குறியதும், கேள்விக்குறியதாகவும் மாறியுள்ளது. பல்வேறு கால கட்டங்களில் காவல் துறையினரின் செயல்பாடுகளை, நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துள்ளது. மிகவும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, காவல்துறையினரின் செயல்பாடு, தமிழக மக்களின் பாதுகாப்பை அச்சமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக, கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் போன்ற கொடிய குற்றங்கள் தொடர்கதைகயாகவே நடந்து வருகின்றன. தினந்தோறும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இந்த நிலை காவல்துறையில் உள்ள பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்
திற்கு வந்துள்ளது.
உதாரணமாக சில சம்பவங்களை பார்ப்போம். முதலாவது, போலீஸ் ஆட்சேர்ப்பில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், தன் மீது கொலை முயற்சி நடந்ததாக கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் (ஏடிஜிபி) கல்பனா நாயக் குற்றம் சாட்டி
யுள்ளார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) மற்றும் காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவாலுக்கு அவர் அளித்த புகாரில், 29 ஜூலை 2024 அன்று சென்னையில் உள்ள தனது அலுவலக அறையை எரித்த தீ விபத்து குறித்து நடுநிலையான விசாரணைக்கு கேட்டது தற்போது பொதுவெளியில் வந்துள்ளது.
இரண்டாவதாக பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியவர்களை கைது செய்து, பின்னர் பிணையத்தில் விடுவித்த சம்பவத்தில், சுமார் 75 நபர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. இது பற்றி காவல் துறையினர் அக்கறையில்லாமல் பதில் அளித்தார்கள்.”ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், அவர்கள் நாடு கடத்தப்படும் வரை சிறப்பு முகாமில் இருக்க வேண்டும்.” என்ற விதியிருந்தும், காவல்துறையினர் சட்டப்படி நடக்கவில்லை என தெரிகிறது.
குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாமல் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது என்று ஜனவரி 6 அன்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உச்சநீதிமன்ற உத்திர
விற்கு புறம்பாக தமிழக அரசு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் காவல்துறை சமூகவலைதளத்தில் தி.மு.க ஆட்சியில் நடக்கும் அவலங்களை வெளியிடுபவர்களை கைது செய்யும் முனைப்பில் தான் அக்கறை காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் இந்த அக்கறையை காட்டினால் குற்றம் குறையும். மக்களுக்கு காவல் துறைமீது நம்பிக்கை வரும்.
இன்று காவல் துறை என்பது ஆளும் கட்சியின் கண் அசைவுக்கு ஏற்ப செயல்படுகிறது. காவல்துறையினர் சட்டத்திற்குட்பட்டு செயல்படுவதற்கு பதில், அரசியல்வாதிகளாலும், ஆட்சியாளர்களாலும் நடத்தப்படுகின்றனர். இவ்வாறான செயல்பாடுகளால் அவதிப்படுவது பொது மக்கள் தான். இந்த நிலை மாற வேண்டும்