‘ஆயுஷ்மான் சங்கம்’ நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா, சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. முதலமைச்சர் சுகாதார காப்பீட்டு அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது எனகூறி மாநில அரசை பாராட்டினார். மேலும், ‘பயனாளி குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆயுஷ்மான் அட்டை வழங்கப்படும், இதனால் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது அதிகாரம் பெறுவார்கள். இது தவிர ஐ.சி.டி மற்றும் ஐ.சி.எச்.ஐ ஆகிய இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (ஏ.பி பி.ம் ஜெய்) மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன் (ஏ.பி.டி.எம்) ஆகிய இரண்டு முதன்மையான மத்திய திட்டங்களை தேசிய சுகாதார ஆணையம் செயல்படுத்துகிறது’ என கூறினார். தமிழக சுகாதார சீரமைப்பு திட்ட இயக்குநர் டாக்டர் உமா பேசுகையில், ‘முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பிரதமரின் ஆரோக்கிய திட்டத்துடன் உடன் இணைக்கப் பட்டதால் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதியை பெற முடியும். இதன் மூலமாக தனியார் மருத்துவமனையில் கூட இலவசமாக சிகிச்சை பெற முடியும்’ என்றார்.