பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டினார்.
தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் (பிப்.,28) நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி ரூ. 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எல்.முருகன் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கி வருகிறார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு, கடந்த 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. 2047ல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு பிரதமர் மோடி பணியாற்றி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் எல்.முருகன், கவர்னர் ஆர்.என்.ரவி, தி.மு.க.,எம்.பி கனிமொழி, அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்