தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து 9,000 போ் கலந்து கொண்டனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டினா் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனா். அவா்கள் மூலமாக பிறருக்கு தொற்று பரவி, மாநாடு முடிந்து ஊா் திரும்பியவா்களால், பலருக்கும் நோய்த் தொற்று வேகமாக பரவியது.
இதனிடையே, ஹரியாணாவில் உள்ள 5 கிராமங்களில் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் தங்கியிருந்தனா். இதையடுத்து, அந்த கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு வசிப்பவா்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனா்.
மேலும், நாடு முழுவதும் தப்லீக் ஜமாத் உறுப்பினா்கள் 25,500-க்கும் மேற்பட்டோரும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மேலும் அவர்களிடம் இருந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கு மாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் புண்ய சலீலா ஸ்ரீவாஸ்தவா.