1857ஆம் ஆண்டு, ஜான்சியின் படைக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் மிகப்பெரிய போராக வெடிக்கிறது. சுதந்திரத்தின் முதல் போராட்டமாக கருதப்படும், இந்தப் போர் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. தன் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு, குதிரையேற்றம் செய்தபடி, கூரிய வாளில் வீசி ஜான்சி ராணி போர் செய்யும் அந்தக் காட்சி, இன்றும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் துணிச்சலையும் வீரத்தையும் விதைக்கும்! தான் பிறந்து வளர்ந்த மண்ணை, பகைவர்களிடமிருந்து காக்க துடிக்கும், ஒவ்வொருவரிடமும் அந்தக் காட்சியிலிருந்து ஓர் உந்துசக்தியை உணரமுடியும்!
ஜான்சி ராணி, லார்ட் டால்ஹவுஸூக்கு (Lord Dalhousie) எழுதிய கடிதம் ஒன்று, லண்டனிலுள்ள ஒரு நூலகத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், தன் கணவர் இறப்பதற்கு முன் எப்படியெல்லாம் அவதிப்பட்டார் என்பது பற்றி ஜான்சி ராணி எழுதியிருந்தாராம். ஜான்சி ராணியை, தன் இடத்தைவிட்டுத்தர சொல்லி வற்புறுத்தியது, லார்ட் டால்ஹவுஸிதான் என்பது குறிப்பிடத்தக்கது! இன்று அவரின் பிறந்த நாள்! ஆனால், அவர் மண்ணில் புதைக்கப்பட்ட கதையிலும் ஒரு வீரம் இருக்கிறது; தான் இறந்தபின், தன் பிணம் பிரிட்டிஷ்காரர்கள் தொடக்கூடாது என்றும், தன் மக்களே தன்னை புதைக்கவேண்டும் என்று முன்னரே கூறியிருந்தார் லட்சுமி பாய். அப்படியே அவரின் இறுதிச் சடங்குகளும் நடந்தன! அவர் இறந்த மூன்று நாள்களில், பிரிட்டிஷ்காரர்கள் அவரின் இடத்தைக் கைப்பற்றினர். ஆனால், அவர்கள் அதைக் கைப்பற்றியதற்கு காரணம், ஜான்சியின் தோல்வியால் அல்ல; இறப்பினால் மட்டுமே!
ஜான்சி ராணிலக்ஷ்மிபாய் பிறந்த நாள் நவம்பர் 19