தணிக்கை அறிக்கை ஆளுநரிடம் சமர்ப்பிப்பு

பாரத அரசியலமைப்பு சட்டத்தின் 151வது சரத்தின்படி, தலைமை கணக்கு தணிக்கையாளர், மாநில அரசின் வரவு செலவுகள் குறித்த தனது தணிக்கை அறிக்கையை அந்தந்த மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். இந்த அறிக்கை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். அவ்வகையில், தமிழக அரசின் வரவு செலவுகள் தணிக்கை அறிக்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் 2023 மே 12 அன்று  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசின் மார்ச் 31 உடன் முடிவடைந்த 2022ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு முறையின், தலைமை கணக்கு தணிக்கையாளரின் செயல்திறன் அறிக்கை மற்றும் 2022ம் ஆண்டுக்கான மின்னணு கொள்முதல் முறை அமலாக்கம் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளரின் செயல்திறன் அறிக்கை ஆகியவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.