இந்தியாவில் நடைபெற்றுவரும் சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டங்களை கண்டுகொள்ளாமல் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கும் நிலையில் இதனை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்ற வேண்டும் என்ன திட்டமிட்டதன் விளைவு நேற்றும், இன்றும் டெல்லியில் மிகப்பெரிய வன்முறை நிகழ்ந்துள்ளது.
வன்முறைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். அரசு கோர்ட்டின் வழிமுறைப்படி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை அளிக்க குழு ஒன்றை அமைத்தது . போராட்டக் காரர்களிடம் கெஞ்சி கூத்தாடி பேசி பார்த்து வழிக்கு வரவில்லை என்றதும் கூட்டம் நடக்கும் பகுதியில் எந்த பிரச்னையும் இல்லை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் ஏற்படுத்தியுள்ள தடுப்புகள் கூட நெரிசலுக்கு காரணம் என்ற புதிய கண்டுபிடிப்பை அறிவித்து தங்களின் அதிபுத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தியுள்ளனர் . ஒரு பகுதியில் போராட்டம் அல்லது முற்றுகை நடக்கின்றது என்றால் அதனை சுற்றியுள்ள தெருக்களை அடைத்து அந்த பகுதியில் இருந்து போராட்டம் நடைபெறும் பகுதிக்கு மற்றவர்கள் செல்லாமல் இருக்க போலீசார் செய்யும் சாதாரண ஏற்பாடு இது என்பது கூட இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியவில்லையே என்பது தான் ஆச்சரியம். மேலும் கோர்ட்டில் உள்ள நீதிபதிகளும் உத்தரகான்ட் புகழ் ஜோசப்பும் சேர்ந்து கொண்டு மக்களின் அமைதியான இந்த போராட்டத்தை மதிக்கிறது என்று வியாக்கியானம் வேறு ……
ஒரு சமூகத்துக்கு இந்த சட்டத்தால் பிரச்னை என்றால் அதனை எப்படி சரிசெய்வது என்று யோசிக்க வேண்டும். மாறாக ஒட்டு மொத்தமாக சட்டத்தை வாபஸ் வாங்கு என்றால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் அண்டை நாட்டில உள்ள முஸ்லிம்களுக்கும் எதோ ஒரு ரகசிய உடன்படிக்கை அல்லது மறைமுக நடவடிக்கைகள் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது கடந்த ஐக்கிய முற்போக்கு அரசில் கூட பங்களாதேஷில் இருந்து சுமார் 2.5 கோடி பேர்வரை இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது அவர்கள்அடையாளம் கண்டு வெளியேற்றப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அப்படியிருக்கையில் இந்தியாவிற்குள் ஊடுருவி கள்ளத்தனமாக வசிப்பவர்களை வெளியேற்றுவதால் இந்திய முஸ்லிம்களுக்கு என்ன பிரச்னை என்பதனை அந்த சமூகம் தான் சொல்ல வேண்டும்.
உலகின் பலநாடுகளில் அந்ததந்த நாடுகளுக்கு என்று கடுமையான் குடியுரிமை சட்டங்கள் அமலில் உள்ளன அதைமீறி எவரும் கள்ளத்நுழைந்தைவிட முடியாது அப்படியே நுழைத்தாலும் அவர்களுக்கு சொந்த நாட்டை சேர்த்த எவரும் உதவி புரிய மாட்டார்கள் அனால் இந்தியாவில் மாறாக ஊடுருவிய மக்களை திரட்டி உள்ளூர் முஸ்லிம்களும் இணைந்து வன்முறையில் ஈடுபட்டு அதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்க முயன்றால் கெடுவான் கேடு நினைப்பான் என்பதனைபோல கடுமையான விளைவுகளை இந்த வன்முறையாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கும் என்பது தான் உண்மை .
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வருகை தந்துள்ள இந்த தருணத்தில் இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை நடத்தி தலைநகர் டெல்லியில் குழப்பத்தை ஏற்படுத்த நிகழும் நாடகமோ என்றும் அஞ்ச வேண்டியுள்ளது. உலக நாடுகளில் இந்தியாவுக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கில் நடந்த வன்முறை வெறியாட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் உள்ளது. எது எப்படியோ என்று இரவு டொனால்டு ட்ரம்ப் விமானம் ஏறியதும் வன்முறையாளர்களுக்கும் ஸாகின்பாக் போராளிகளும் இடத்தை காலி செய்ய வேண்டியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்…….