டெல்லி முதல்வராகயிருந்த அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்தாலும், உச்ச நீதிமன்றம் விதித்த சில நிபந்தனைகள் காரணமாகவே, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அதிஷி மர்லேனாவை முதல்வராக முன்மொழிந்தார்.
அதிஷி மர்லேனாவின் பெற்றோர்களின் பின்னணியை கவனித்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என்பது புரியும். இவரும் அர்பன் நக்சல் சிந்தனை கொண்டவர்.
2001-ம் ஆண்டு பாரத நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அப்சல் குருவின் விடுதலைக்கு குரல் கொடுக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரே அதிஷியின் தாய் திரிப்தா வஹி தான். தந்தை விஜய் சிங் அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்தவர்.
அப்சல் குரு தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு வழங்கிய கருணை மனுவில் இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். குடியரசு தலைவருக்கு அளிக்கப்பட்ட கருணை மனுவில் 57, 58 வது நபர்களாக இவர்களின் இருவர் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. மேலும், அப்சல் குருவுக்கு ஆதரவாக அதிஷியின் தாய் பேசிய பழைய வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இப்படி பயங்கரவாதிக்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதரவான குடும்பத்தைச் சேர்ந்த அதிஷி பாரதத்தின் தலைநகர் டெல்லியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது தவறானது எனப் பலரும் தங்களின் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.
அதிஷி மர்லேனாவின் தந்தை பேராசிரியர் விஜய் சிங் கம்யூனிஸ்ட் பிரச்சார இணைய தளமான Revolutionary Democracy ஆசிரியர். இவரின் மகள் எப்படி கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திலிருந்து மாறுபடுவார்.
பாரத எதிர்ப்பு இயக்கங்களில் தனது குடும்பத்தினரின் ஈடுபாடு குறித்தும், அவர்களது கம்யூனிஸ்டு தொடர்பு குறித்தும் கருத்து தெரிவிக்காமல், வாய் மூடிக் கொண்டிருக்கிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, தனது வேட்பு மனுவில் மர்லேனா என்பதற்கு பதிலாக அதிஷி சிங் என மாற்றம் செய்த மோசடி பேர்வழி இவர்.
பாரதத்தின் தலைநகர் டெல்லி, மிகவும் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டிய பகுதி.இப்பகுதியின் முதல்வராக பதவி ஏற்றுள்ளவரின் பிடியில் பாதுகாப்பு பற்றிய அச்ச உணர்வு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.