ஜார்ஜ் பொன்னையா மீண்டும் சர்ச்சை பேச்சு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரிலான ஒரு நடை பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது பயணத்தின் இடையே பல்வேறு நபர்களை சந்தித்து பேசி வருகிறார். அதில் கூடங்குளம் உதயகுமார், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட சில சர்ச்சைக்குரிய பிரிவினை கருத்துகளை விதைத்து வருபவர்களும் அடக்கம். ராகுலின் இந்த பயண திட்டத்தை வடிவமைத்தவர்கள் யார் என சற்று திரும்பிப் பார்த்தால் தேச பிரிவினைவாதத்தை உயர்த்தி பிடிக்கும் யோகேந்திர யாதவ், பிஜி கோல்சே பாட்டீல், அருணா ராய், சயீதா ஹமீத், தேவானூர மகாதேவா, பிவி ராஜகோபால், கணேஷ் தேவி போன்ற சோஷலிஸ்ட்டுகள், இடதுசாரிகள், என்.ஜி.ஓக்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான். இந்த சூழலில், பாதிரி ஜார்ஜ் பொன்னையாவும் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ராகுல், ஏசு கிறிஸ்து கடவுளின் ஒரு வடிவம்? அது சரியா? என அவரிம் கேட்டபோது, அதற்கு ஜார்ஜ் பொன்னையா, “அவரே உண்மையான கடவுள். சக்தியை போல அல்ல. ஏசுவே உண்மையான கடவுள். கடவுள் தன்னை ஆணாக வெளிப்படுத்தி இருக்கிறார். உண்மையான ஒரு மனிதராக, சக்தியை போன்று அல்ல. அதனால், நாம் ஒரு மனிதரை பார்க்கிறோம்” என ஹிந்து மதத்தை புண்படுத்தும் விதத்தில் சர்ச்சைக்குரிய பதிலை அளித்துள்ளார். இதனை ராகுல் காந்தி கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்ட அனுபவம் ஜார்ஜ் பொன்னையாவுக்கு உண்டு. கடந்த ஆண்டு ஜூலையில், மதுரையில் பேசிய அவர், பாரத மாதாவின் அசுத்தங்களால் நான் கெட்டுபோய் விடக்கூடாது என்பதற்காகவே நான் காலணிகளை அணிகிறேன் என தெய்வ நிந்தனை செய்தவர். மேலும், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தி.மு.க. அமைச்சர் குறித்தும் அவதூறாக பேசியவர். முக்கியமாக, தி.மு.க வெற்றி என்பது சிறுபான்மையினர் போட்ட பிச்சை என உலகறியும் வண்ணம் எடுத்துரைத்தார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.