ஜார்கண் ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. சென்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆளும்கட்சியாக இருந்த பா ஜ க அதிகாரத்தை இழந்துள்ளது. சென்ற நாடாளுமன்ற தேர்தலின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு கிடைத்த தோல்வி இது . மகாராஷ்டிரத்தில் சிவசேனையிடம் அதிக இடங்களை விட்டு கொடுத்து வெற்றி பெற்றும் முதல்வர் பதவி கேட்டு காலை வாரியதால் தோல்வி. ஜார்கண்ட்டிலோ அனைத்து ஜார்கண்ட் மாணவர் முன்னணியிடம் கறாராக நடந்து கொண்டதால் கிடைத்த தோல்வி இ து. சட்டமன்ற தேர்தல்களில் சிறிய கட்சிகளின் ஆதரவு பெரிய பலனை தரும் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் 51%வாக்குகளை பெற்று மாநிலத்தின் 14 தொகுதிகளில் 12 தொகுதிகளை வென்ற பா ஜ க கூட்டணி இந்த தேர்தலில் கூட்டணியின் துணையின்றி தோல்வியை அடைந்துள்ளது . மாநில தேர்தல் முடிவுகளில் 33.4% வாக்குகளை பெற்ற பா ஜ க 25 இடங்களில் வென்றுள்ளது. அனைத்து ஜார்கண்ட் மாணவர் முன்னணி தனித்து போட்டியிட்டு 8.10 %வாக்குகளுடன் இரண்டு இடங்களை வென்றுள்ளது . பாஜக வின் முன்னாள் முதல்வரான பாபுலால் மராண்டியின் ஜார்க்கண் ட் விகாஸ் மோர்ச்சா கட்சி 5.45% வாக்குகளுடன் மூன்று இடங்களில் வென்றுள்ளது எதிரணியில் சிபு சோரனின் ஜார்கண் ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 18.72% வாக்குகளும் 30 இடங்களும் கிடைத்துள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 13.88%வாக்குகளும் 16 இடங்களும் கிடைத்துள்ளது மற்றொரு கூட்டணிகட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கு 2.75% வாக்குகளும் ஒரு இடமும் கிடைத்துள்ளது .
மாநிலம் புதிதாக உருவான காலம் தொட்டு முழுமையாக ஐந்தாண்டுக்காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை கொண்டவர் பா ஜ க வின் ரகுபர்தாஸ் .இவர் பழங்குடிமக்களை அதிகமாக கொண்ட இந்த மாநிலத்தில் பழங்குடிகள் அல்லாத முதல்வரும் கூட ஐந்தாண்டுகள் வகித்த காலத்தில் பழங்குடி பகுதிகளில் உள்ள அரசு நிலங்களை தொழில் தொடங்குவதற்காக இதர பிரிவினருக்கு வழங்கலாம் என்று கொண்டுவந்த ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை அமல் செய்ததால் பழங்குடி மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளனர் . மாநிலத்தில் மொத்தமுள்ள 28 பழங்குடி இனமக்களுக்கான தொகுதிகளில் 25 இடங்களை ஜே எம் எம் கூட்டணி கைப்பற்றியுள்ளது இந்த பகுதிகளில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே பா ஜ க வென்றுள்ளது. இதிலிருந்தே சென்ற பா ஜ க அரசின் மீது பழங்குடியின மக்கள் கடும் கோபத்துடன் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது . மேலும் கூட்டணி கட்சியான அணைத்து ஜார்கண்ட் மாணவர் முன்னணி தொகுதி பங்கீடு விஷயத்தில் 18 இடங்களை கேட்டு அடம்பிடித்தது. சென்ற முறை 10 இடங்களில் போட்டியிட்டு 5 இடைகளில் வென்றதால் இந்தமுறை அதிக தொகுதிகளை கேட்டது 13 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக்கொண்டது பா ஜ க . அதனை ஏற்காத அணைத்து ஜார்கன்ட் மாணவர் முன்னணி கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்து போட்டியிட்டது விளைவு குறைத்து 12 இடங்களில் தோல்வியடைந்துள்ளது பா ஜ க . முன்னாள் முதல்வரின் ஜே வி எம் கட்சியால் 7 இடங்களில் தோல்வி . கிட்டத்தட்ட ஹரியானா மாநிலம் போன்று அறுதி பெரும்பான்மைக்கு ஒருசில இடங்கள் குறைவாக இருக்கும் முந்தய நண்பர்களை கொண்டு அதனை நிரப்பிவிடலாம் என்று நம்பி இருந்த பா ஜ கவிற்கு ஓட்டுகள் பிரிந்ததால் தோல்வி கிடைத்துள்ளது.
எதிரணியில் கழிக்க வேண்டியவர்களை கழித்தும் சேர்க்கவேண்டியவர்களை சேர்த்தும் இந்த கூட்டணி பலனடைந்தது .நாடாளுமற்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் ஜே வி எம் கட்சியை கூட்டணியில் சேர்த்து கொண்ட ஜே எம் எம் கட்சி இந்த சட்டமன்ற தேர்தலில் கழற்றி விட்டது. காங்கிரஸ் ஜே எம் எம் கட்சிக்கு அதிக இடங்களை விட்டு கொடுத்து தான் குறைவான இடங்களில் போட்டியிட்டது. மற்றொரு கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் ஒரு சில தொகுதிகளை விட்டு கொடுத்தது. விளைவு ஓட்டுகள் ஒன்றிணைந்ததால் மிகப்பெரிய வெற்றி கிட்டியுள்ளது.
மேலும் பா ஜ க அணியில் முதல்வர் மிக நல்லவர் அரசின் மீதும் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டும் இல்லை ஆனால் அவர் சக அமைச்சர்களோடு இணைந்து எதையும் செய்யமாட்டார் தனியே எல்லா முடிவுகளையும் எடுப்பார் மேலிட செல்வாக்கால் உள்ளுர் தலைவர்களை புறக்கணித்தார் விளைவு அவரது அமைச்சரவை சகா ஒருவரே தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைய செய்தார் போரில் தளபதியே தோற்றபின்பு படைவீரர்கள் என்ன செய்யமுடியும் ஒட்டுமொத்தமாய் தோல்வி கிடைத்தது.
எதிரணியில் சிபுசோரனின் மகனான ஹேமந்த் சோரன் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார் . காங்கிரஸுடன் நல்லுறவை தொடர்ந்தார் . 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் கிடைத்த கடுமையான தோல்விக்கு பிறகும் மாநில அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டி, அரசியல் செய்தார் பழங்குடி மக்களுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்து தனது கட்சிக்கு ஆதரவை பெருக்கினார் அதன் விளைவு தற்போதைய தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக ஜார்கண் ட் முக்தி மோர்ச்சா உருவெடுத்துள்ளது. மாநிலம் உதயமான நாளிலிருந்து தனது கட்சிக்கே முதல்வர் பதவி என்று அடம்பிடித்து பதவிக்கு வந்தாலும் ஒருமுறைகூட முழுமையாக ஆட்சிசெய்ததாக வரலாறு இல்லை.
இதுவரை நடந்துள்ள அனைத்து தேர்தலிலும் ஒருகட்சி ஆட்சி என்பது மாநிலத்தில் இருந்தது இல்லை எப்போது பார்த்தாலும் கூட்டணி ஆட்சிதான் அதிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மூன்றுமுறையும் பலகட்சி கதம்ப கூட்டணிதான். சுயேட்சை எம் எல் ஏ மதுகோடா என்பவரால் மாநிலம் ஆட்சி செய்யப்பட்ட வரலாறும் உண்டு விதிவிலக்காக பா ஜ க வின் இரு ஆட்சிகள் பெரும்பான்மை பா ஜ க எம் எல் ஏக்களும் ஒருசில கூட்டணி கட்சி எம் எல் ஏக்களும் இருந்துள்ளனர் அரசியல் நிலைத்தன்மை இல்லாத சுயநல அரசியல்வாதிகள் நிரம்பிய இந்த மாநிலத்தில் வளர்ச்சியும் மக்கள் நலனும் பாதுகாக்கப்படுவதே மாநிலத்தின் இப்போதைய தேவை!