ஜார்கண்டில் கட்டாய மதமாற்ற முயற்சி

ஜார்கண்ட் மாநிலம் பர்ககானில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, கிரண் தேவி என்ற ஹிந்து பெண்ணின் வீட்டிற்கு இரவு 8:30 மணியளவில் வந்த அந்த கிராமத் தலைவர் வாசின், அவரது மகன் மற்றும் சுமார்12 முஸ்லிம் நபர்கள், மோசமான வார்த்தைகளைப் பேசி திட்டினர். கிரண் தேவியின் இரு மகள்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் அந்த சிறுமிகளை முஸ்லிமாக மதம் மாற வற்புறுத்திய அவர்கள் மறுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்த இரண்டு சிறுமிகளையும் துன்புறுத்தி அதை வீடியோ எடுத்து அவர்களின் தாய்க்கு அனுப்பி இதனை அனைவருக்கும் பரப்பு என கூறியுள்ளனர். கிரண் தேவி, கிராம செயலாளர் ஃபர்சுதீன், பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் ஷப்னம் பர்வீனின் கணவர் முகமது இர்பான் மற்றும் அங்கு பெருபான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்களை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தார். இதனை அறிந்த வாசின் மீண்டும் இரவில் கிரண் தேவியின் வீட்டிற்கு வந்து அடித்து துன்புறுத்தியுள்ளார். வேறுவழியின்றி இதுகுறித்து சனாதன் ஹிந்து சமாஜ் சங்கத்தில் கிரண்தேவி புகார் அளித்தார். இதையடுத்து அந்த அமைப்பினர், பர்ககான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரினர். குற்றவாளி யார் என தெரிந்திருந்தும் காவல்துறையினர் இதில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,  இதில் நடவடிக்கை எடுக்கக்கோரி ஹிந்து அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 பேரை மட்டுமே கைது செய்துள்ள காவல்துறை மற்றவர்களை தேடிவருவதாக கூறியதுடன், வழக்கை திசைதிருப்பும் நோக்கில்,  மத அடிப்படையில் மக்களைத் தூண்டியதாக கிரண் தேவி மீதும் ஹிந்து அமைப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.