ஜம்மு-காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர் பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் ஒரு பயங்கரவாதி இறந்தார் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர் பலியான பயங்கரவாதி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் காஷ்மீரில் பல பயங்கர தாக்குதலில் ஈடுபட்டவர் என்பதும் முதல்கட்ட தகவல் தெரியவந்துள்ளது
மேலும் 40 பயங்கரவாதிகள் கட்டுப்பாடு எல்லைகோடு வழியாக ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளன தொடர்ந்து எல்லை கொடு பகுதிகளில் இந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது