ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம்

ங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல. ஏசுவின் பிறப்பை தொடக்கமாகக் கொண்டதால் ஒரு மத ஸ்தாபகர் பெயரிலான காலண்டர்; அதை எல்லா மதத்தினரும் ஏற்றுக்கொள்ள முடியாதே? எனவே ஜனவரி தொடங்கும் கால கணிப்பு கிரகங்களையும் நட்சத்திரங்களையும் பின்பற்றாமல் மன்னர்களையும் பாதிரிகளையும் நினைவுப்படுத்தும் வகையில் மாதங்களின் பெயர்களைக் கொண்டதால் இது விஞ்ஞானப்பூர்வமற்றது. விஞ்ஞானபூர்வமான ஹிந்து காலக் கணக்கு முறை இருக்கும்போது இது எதற்கு?

 

page-18-19_picங்கிலம் சர்வதேச மொழி என்பது எப்படி ஒரு பொய்யோ, அதுபோலத்தான் இந்த ஜனவரி காலண்டர் சமாச்சாரமும். இதை உலகில் பல நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆங்கிலேயர்களின் பிடியில் பாரதம் சில காலம் இருந்ததால் பாரத மக்கள் மீது இந்த காலண்டர் திணிக்கப்பட்டிருக்கிறது. பாரத மக்கள் இதனை உதற நல்ல நாள் பார்க்கட்டும். ஹேப்பி நியூ இயர் பித்து, நகர்ப் புறங்களோடு சரி. கிராமங்களில் இன்றும் ஆவணி, புரட்டாசி என்று ஹிந்து (தமிழ்) மாதங்களை வைத்துத்தான் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நகரவாசி கிராம வாசியைப் பார்த்து திருந்தும் நாள் எந்நாளோ?

வீடுகளின் சுவர்களில் தொங்கும் தினசரி காலண்டர்களைத் திருப்பி பார்த்தால் ‘கிறிஸ்தவ பண்டிகைகள்’ என்ற தலைப்பில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உட்கார்ந்துகொண்டிருக்கும். சொரணையுள்ள ஹிந்துக்கள் இந்த கிறிஸ்தவ பண்டிகையை ஹேப்பி நியூ இயர் சொல்லி தலையில் தூக்கிவைத்துக்கொள்ள மாட்டார்கள். இங்கிலாந்தில் வசிக்கும் எந்த வெள்ளைக்காரன் (ஏப்ரல் 14 அன்று தொடங்கும்) ஹிந்து புத்தாண்டை ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லி கொண்டாடுகிறான்? வெகுஜன ஹிந்துக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நமது நாட்டில் புத்தாண்டுகளுக்கா பஞ்சம்? தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் சித்திரை புத்தாண்டு என்றால் மஹாராஷ்டிரா உள்ளிப்பட்ட பகுதிகளில் யுகாதி!

ந்த கண்றாவி ‘நியூ இயர்’ அன்று வேளை கெட்ட வேளையில் தொன்மையான ஆகமங்களுக்கு உட்பட்ட ஹிந்து கோயில்களை அகலத் திறந்துவைத்துக்கொண்டு ‘புத்தாண்டு’ கொண்டாடும் பைத்தியக்காரத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, பொறுப்பான ஹிந்துக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். கேவலம் அரசின் பிடியில் இருக்கிறது என்ற காரணத்தால் ஹிந்து கோயில் நிர்வாகத்தில் மதச்சார்பற்ற தான்தோன்றித் தனம் தாண்டவமாட விடலாமா? (வெள்ளைக்காரன் காலத்தில் நியூ இயர் அன்று மேலதிகாரியை பூ, பழம் கொடுத்து வாழ்த்தும் அடிமை சடங்கு வெறுத்துப்போய் ஹிந்து உணர்வுள்ள நீதிபதி ஒருவர் அன்றைய தினம் திருத்தணி சென்று கோயிலில் படித்திருவிழாவில் கலந்துகொள்ளத் தொடங்கினார். அதை மறந்து பல கோயில்களில் நியூ இயர் நடு ராத்திரி கூத்து அட்டையாக ஒட்டிக்கொண்டுவிட்டது.

ஹிந்து காலக் கணக்கு விஞ்ஞான ரீதியானது; ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பே அச்சான மன்மத வருஷ பஞ்சாங்கத்தில் சென்னையில் பெரு மழை என்று எந்தத் தேதியில் பஞ்சாங்கம் குறிப்பிட்டதோ அதே தேதியில் அதே போல மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு இனி பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்க்க வெட்கப்படவேண்டியதில்லை. விண்வெளியில் சுழன்றுவரும் சூரிய சந்திரர்களுக்கு கிரகணம் எந்த தேதியில் எந்த நிமிடத்தில் தொடங்கி, எந்த நிமிடத்தில் முடியும் என்பது முனிவர்கள் தந்த கணக்கு முறையில் பதிவு செய்யப்பட்டு பக்தர்களால் பின்பற்றப்படுகிறது. கிரகணங்களும் துல்லியமாக வந்து போகின்றன.

ஹிந்து (தமிழ்) புத்தாண்டு தொடக்கத்தை வைத்து மாத காலண்டர்கள் (சித்திரையில் தொடங்கி) தயாரித்து விநியோகிக்கும் நல்ல பழக்கம் மெல்ல மெல்ல பரவி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைகளால் ஊக்கம் பெற்ற ஹிந்துஸ்தான் சமாச்சார் செய்தி ஸ்தாபனம் ஹிந்து புத்தாண்டு (யுகாதி) தொடக்கத்தை வைத்து டயரி புத்தகங்கள் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் சுதேசி சிந்தனையாளர்கள் முயற்சியால் ‘சுதேசி நாள்காட்டி’ சித்திரை புத்தாண்டை ஒட்டி வெளியிடப்பட்டு மக்களுக்கு உண்மையை உணர்த்தி வருகிறது. ‘இனி அடுத்த மாத கூடுதல் 24ஆம் தேதி…’ என்று சொல்வதை ‘இனி அடுத்த மாதக் கூடுதல் ஆங்கில 24ஆம் தேதி’ என்று சொல்லப் பழகி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.