ஜனநாயகத்தை புதைக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், குடியரசுத் தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வந்தது. இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், அவரது செயல்பாடுகள் குறித்தும் காங்கிரஸ் எப்போதும் போல அவதூறு பரப்பியது. மேலும் அவர்களின் வன்மத்தின் வெளிப்பாடாக தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா உட்பட பெண் எம்.பி.க்கள் பாரத பிரதமர் அவர்களை நேரில் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்க திட்டமிட்டு, அதற்கு முன்னேற்பாடாக அவரது இருக்கையை நோக்கி காங்கிரஸ் எம்.பி.க்கள் திட்டமிட்டு அழைத்தது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
நாடாளுமன்ற மக்களவையில், காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மற்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறைக்குள் சென்று வாக்குவாதம் செய்தது ஆகிய வீடியோக்களை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிடவில்லை என்றால், இவர்களின் சதிச்செயல் மக்கள் மன்றத்தில் வராமலே போயிருக்கும்.
இந்த வன்மத்தின் மனநிலை, பல ஆண்டு காலம் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் ரத்தத்திலேயே ஊறியது. நாட்டை சுரண்டி தின்ற இந்த காங்கிரஸ் கும்பலுக்கு, பாரதம் தற்பொழுது தேசபக்தர்கள் கையில் சென்றது பிடிக்கவில்லை. எப்படியாவது ஊழல் கரை படியாத, தொலை நோக்கத்துடன் நாட்டை ஆட்சி செய்யும் பிரதமர் மீது அவதூறு பரப்ப வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற இழிவான நோக்கம் தவிர, இதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
பிரதமர் மீது பாரத மக்கள் வைத்துள்ள நல்ல மதிப்பையும், பாசத்தையும், அவரின் மீதான பற்றையும் பெண் எம்.பிக்களை வைத்து அவரை தாக்குவதன் மூலம் சிதைத்துவிட முடியும் என நினைப்பது ஒன்றே, இந்த காங்கிரஸ் மனநிலை. மக்கள் இந்த ஊழலில் திளைத்த கூட்டத்தின் ஆட்சியை விரட்டினார்கள், இப்பொழுது இவர்களின் மனநிலையை நன்கு புரிந்துகொண்டார்கள்.
கேடுகெட்ட இண்டி கூட்டணியை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியின் இந்த செயலை இண்டி கூட்டணியில் உள்ள எம்.பிக்கள் ஆதரிக்கவும் செய்கிறார்கள் என்றால், புரிந்துக் கொள்ளுங்கள். இண்டி கூட்டணி எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தைக் கொண்டவர்கள்! இந்த கும்பல் எந்த நிலைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த தாக்குதல் முயற்சி சம்பவமே சான்று. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் காங்கிரஸ் கட்சியின் இழிவான செயல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்தை விரும்பாத, மக்களின் வளர்ச்சியை விரும்பாத, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதை விரும்பாத, பெண்கள் முன்னேற்றத்தை விரும்பாத, இளைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதை விரும்பாத, விவசாயிகளின் உழைப்பிற்கு கைமேல் பலன் கிடைப்பதை விரும்பாத, தொழில் முனைவோர்கள் அதிகம் உருவாகும் இந்த சூழலை விரும்பாத, முன்னேற்றத்தை விரும்பாத, நாட்டின் உட்கட்டமைப்பு சரியான வளர்ச்சியை நோக்கி செல்வதை விரும்பாத, அந்நிய நாடுகள் நம் நாட்டில் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரமும், தொடர்பும் வைத்துக் கொள்வதை விரும்பாத, பாகிஸ்தானை விட பலமடங்கு வளர்ந்து, இன்று உலகில் முக்கியத்துவம் மாறிய நாடக நமது நாடு உருவெடுத்துள்ளதை விரும்பாத, நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அசுர வேகத்தில் வளர்வதை விரும்பாத கும்பலுக்கு இப்படி அவதூறு பரப்புவதை தவிர வேறு என்ன அரசியல் தெரியும்?
மக்கள் மீதான அக்கறை இருந்தால் அவதூறு அரசியல் செய்ய இந்த இண்டி கும்பல் முன்வரமாட்டார்கள். ஆனால் இவர்களுக்கு இருப்பது, நாட்டை சுரண்டி திங்கும் எண்ணம், தங்கள் வாரிசுகளை அரசியலில் வேரூன்ற வைக்கும் எண்ணம், எந்த திட்டத்தில் ஊழல் செய்யலாம் என்ற எண்ணம், மக்கள் வரிப்பணத்தை எப்படி தின்று கொழிக்கலாம் என்ற தீய எண்ணம், மக்களை போதைக்கு அடிமையாக்கி எப்படி அரசியல் தெளிவு இல்லாமல் செய்யலாம் என்ற எண்ணத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்.
சமீப காலத்தில் நடந்து முடிந்த பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களின் தேர்தல்கள் அதன் முடிவுகள் கொடுத்த செய்திகளே உணர்த்தும் மக்கள் யார் பக்கம் என! வரவிருக்கும் தமிழகம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநில 5 தேர்தல் முடிவுகள் சொல்லும் மக்கள் பாஜக பக்கம்தான் என்றும், இந்த சுயலாபத்தை வைத்து அரசியல் செய்யும் கும்பலின் பக்கம் இல்லை என இண்டி கும்பலுக்கு உணர்த்தும்.
இறுதியாக மக்களின் கூட்டமைப்பு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மக்கள்தான் மன்னர்கள். சமீபத்தில் பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்கள் பணிக்காலம் முடிந்து கமலாலயத்தை விட்டு சென்ற அடுத்த நாளே, ஆர்.எஸ்.எஸ் ஷாகாவிற்கு சைக்கிளில் சென்றார். இதனை அனைவரும் பார்த்திருப்போம். இதுதான் நாட்டுப்பற்று, தேசபக்தியின் வெளிப்பாடு. இந்த சர்வசமர்ப்பணம் கொண்ட தேசபக்தர்கள் இருக்கும்வரை சுயநல அரசியவாதிகளும், சந்தர்ப்பவாத கூட்டணி கட்சிகளும், இந்த நாட்டில் எந்த ஒரு கெட்ட எண்ணத்தையும் செயல்படுத்த முடியாது. அதற்கு தேச பக்தர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள்.